தமிழகத்தில் அரசு தேர்விற்கான அறிவிப்பு ரத்து – இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

0
தமிழகத்தில் அரசு தேர்விற்கான அறிவிப்பு ரத்து - இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் அரசு தேர்விற்கான அறிவிப்பு ரத்து - இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் அரசு தேர்விற்கான அறிவிப்பு ரத்து – இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வின் அறிவிப்பை ரத்து செய்ததற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமையலர் தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான வார்டன் காலிப்பணியிடங்களும், ஆயிரக்கணக்கான சமையலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அதாவது தமிழகத்தில் மட்டுமே மொத்தமாக 1384 ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகள் இருக்கின்றன. உடனடியான இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

TNUSRB PC தேர்வுக்கு தயாராகுபவர்கள் அறிய வாய்ப்பு – குறைந்த விலையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

இதனையடுத்து, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் காலியாக உள்ள வார்டன் மற்றும் சமையலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் உள்ள அனைத்து குறைகளும் ஒரு மாத காலத்திற்குள் கண்டிப்பாக தீர்த்து வைக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதனிடையே, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி சமையலர் தேர்விற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், சமையலர் தேர்வு எழுதியவர்கள் பணி ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் விடுதி சமையலர் தேர்விற்கான அறிவிப்பை ரத்து செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்குழுவின் முக்கிய பணி உரிய நபர்களை தேர்வு செய்வதுதான் எனவும் உயர்நிதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here