Post Office இல் 20000 ரூபாய் தராங்களா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?

0
Post Office இல் 20000 ரூபாய் தராங்களா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?
Post Office இல் 20000 ரூபாய் தராங்களா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?
Post Office இல் 20000 ரூபாய் தராங்களா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?

கோவிட்-19 பெருந்தொற்று வருகைக்கு பின்னர் அதிகமான நிதி நெருக்கடியை பொதுமக்கள் சந்தித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த மக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும் வங்கிகளை விட போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. போஸ்ட் ஆபீஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது

வைரலாகும் செய்தி:

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் சேமிப்பு திட்டங்கள் இருப்பதால், அவற்றில் பாதுகாப்பானதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். தபால் அலுவலக திட்டங்கள் ரிஸ்க் இல்லாதவையாகவும், நல்ல வருமானம் தருபவையாகவும் உள்ளன. அதாவது வருங்கால வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என வருமான வரி விலக்கு அளிக்கக் கூடிய சேமிப்பு திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் பொது மக்களின் பயனுக்கு வழங்கி வருகின்றன. PPF திட்டத்தில் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்தால் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

இந்நிலையில் சேமிப்பு திட்டங்களை தொடர்ந்து தபால் துறை சார்பில் லாட்டரி குலுக்குச் சீட்டு நடத்தப்படுவதாகவும், அதில் வெற்றிபெறுபவர் 20,000 ரூபாய் பெற முடியும் எனவும் ஒரு இணையதளத்தில் தகவல் தீயாய் பரவியது. இதை உண்மை என நினைத்து குலுக்குச் சீட்டு பற்றிய செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்தனர். இது குறித்து விசாரித்த மத்திய அரசு இது மோசடிக்கான முயற்சி என்று தெரிவித்து உள்ளது. தபால் நிலைய பெயரை பயன்படுத்தி தொடங்கப்பட்ட அந்த இணையதளம் போலியானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பத்திரிகை தகவல் அலுவலகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

20000 ரூபாய் பரிசுக்கு இந்திய தபால் துறை குலுக்குச் சீட்டு நடத்துவதாக தகவல் வெளியிட்ட இணையதளம் ஒரு போலியான இணையதளம் என பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இணையதளத்துக்கும் தபால் துறைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனவும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவொரு பொய்யான இணையதளம் என இந்திய தபால் துறையும் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போலி இணையதளங்கள், நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும், இவர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. எனவே தபால் நிலைய வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!