மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

0
மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு!
மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு!
மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா பேரிடர் காலத்திற்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் மாநில அரசுகள் கோடை விடுமுறை நாட்களை குறைத்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 2ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வரும் இந்த நேரத்தில் பல மாநிலங்களில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நடைபெற்று வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவது தொடர்பாக குழப்பமான சூழல் நிலவி வந்தது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு அதிகளவு விடுமுறை விடப்பட்டதால், 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. பொதுவாக தேர்வு முடிந்த பின்னர் ஏப்ரல் 15ம் தேதியே 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை மகாராஷ்டிரா கல்வித்துறை அறிவித்துள்ளது.

BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

அதன்படி கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் விதர்பா பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக அங்கு மட்டும் ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முடிவுகள் ஏப்ரல் 30ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் மாணவர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here