BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

0
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

BECIL நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் இயங்கி வரும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அலுவலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் உள்ள 378 காலி பணியிடங்களில் தகுதியான நபர்களை எழுத்துத் தேர்வு மற்றும் கணினி அறிவு தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதாகவும் இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிப்படும் மக்கள் – அரசு எடுக்கும் முடிவு என்ன?

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணிக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் டேட்டா என்ட்ரி பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு எழுத்துத் தேர்வானது கொள்குறி வகையிலும் மற்றும் விளக்க கேள்விகளை கொண்டும் நடத்தப்படுகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

மேலும் இதில் பொது விழிப்புணர்வு, நடப்பு நிகழ்ச்சிகள், ஆங்கில இலக்கணம் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். மேலும் விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் அறிவு தேர்வில் MS Word, Excel மற்றும் PowerPoint உள்ளிட்டவை பற்றி தெரிந்து இருக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு டெல்லி அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களின்படி சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பக் கட்டணமாக SC, ST, EWS மற்றும் PH உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.450 வசூலிக்கப்படுகிறது. அத்துடன் பொது, ஓபிசி, முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு உள்ளிட்டவர்களுக்கு ரூ.750 வசூலிக்கப்படுகிறது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் 25ம் தேதியுடன் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!