சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 9ம் தேதி பட்ஜெட் தாக்கல்!

0
சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் 9ம் தேதி பட்ஜெட் தாக்கல்!
சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் 9ம் தேதி பட்ஜெட் தாக்கல்!
சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 9ம் தேதி பட்ஜெட் தாக்கல்!

சென்னை மாநகராட்சி 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் 9-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளது. புதிய மேயர் பிரியாராஜன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். அதனால் பொதுமக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பட்ஜெட் தாக்கல்:

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி அன்று 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 22ம் தேதி அன்று மாநில தேர்தல் ஆணையத்தில் முறையான முன்னேற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு வார்டு உறுப்பினர்கள் மற்றும் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனர்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக்கியத் தகவல் வெளியீடு!

அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் அதிமுக சார்பில் பிரியாராஜன் புதிய மேயராக கடந்த 4ம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் 9-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளது. புதிய மேயரான பிரியாராஜன் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். அதனால் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர் பதவியேற்ற பிறகு சென்னை மழைநீர் வடிகால், சாலை வசதி, மழைநீர் சேமிப்பு ஆகிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

அதனால் இவர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இளம் வயது மேயர் என்பதால் திமுக சார்பாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இவர் பதவியேற்ற பிறகு சென்னையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குதல் போன்றவைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது வரவிருக்கும் பட்ஜெட் தாக்கலை அடுத்து பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!