தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக்கியத் தகவல் வெளியீடு!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - முக்கியத் தகவல் வெளியீடு!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - முக்கியத் தகவல் வெளியீடு!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக்கியத் தகவல் வெளியீடு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், 13.58 லட்சம் மாணவியர் மற்றும் மூன்று பாலினமான திருநங்கையர் உள்பட, 26.76 லட்சம் மாணவ – மாணவியர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். மேலும் பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17; பிளஸ் 2வுக்கு ஜூன் 23 , பிளஸ் 1 க்கு ஜூலை 7ம் தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

முக்கிய தகவல்:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என கூறி பள்ளிக்கல்வித்துறை கால அட்டவணை வெளியிட்டு உள்ளது. இந்த அட்டவணை படி பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5, பத்தாம் வகுப்புக்கு மே 6, பிளஸ் 1க்கு மே 10ல் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி வரும் மே 5ம் தேதி பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த தேர்வில் 27 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் 10ம் வகுப்புக்கு 4,000 மையங்கள் மற்றும் 12ம் வகுப்புக்கு 3,000 மையங்கள் அமைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து உள்ளது. மாநிலம் முழுவதும் காலை 10:00 மணி முதல் பகல் 1:15 மணி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

நாட்டில் முழு ஊரடங்கு மேலும் சில காலம் நீட்டிப்பு? பிரதமர் எடுக்க போகும் முடிவு!

அந்த பட்டியல் படி, பத்தாம் வகுப்பில், 12 ஆயிரத்து 713 பள்ளிகளை சேர்ந்த, 4.69 லட்சம் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்பட, 9.55 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இதையடுத்து பிளஸ் 2வில் 7,506 பள்ளிகளை சேர்ந்த 4.39 லட்சம் பெண்கள் உள்பட, 8.37 லட்சம் பேர், பிளஸ் 1ல் 7,534 பள்ளிகளை சேர்ந்த 2 திருநங்கையர், 4.50 லட்சம் பெண்கள் உள்பட, 8.84 லட்சம் பேரும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதையடுத்து தனித் தேர்வர்கள் 10ம் வகுப்பில், 30 ஆயிரத்து 890, பிளஸ் 2ல் 28 ஆயிரத்து 380, பிளஸ் 1 வில் 5717 பேர் என மொத்தம், 64 ஆயிரத்து 987 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதுமட்டுமின்றி சிறைகளில் உள்ள 413 கைதிகளும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அவர்களில், 242 பேர் 10ம் வகுப்பு, 73 பேர் 12 வகுப்பு, 98 பேர் பிளஸ் 1 தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புக்கு 3936, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தலா 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க, 1241 ஆசிரியர்கள் நிலையான கண்காணிப்பு படையிலும்; 3,050 ஆசிரியர்கள் பறக்கும் படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுத்தேர்வு முடிந்து, அனைத்து தேர்வு மையங்களில் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, 118 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு பின்னர், 10ம் வகுப்புக்கு 86 மையங்களில், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு தலா 80 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!