பாக்கியாவை ஏமாற்ற வேண்டாம் என கோபியிடம் கெஞ்சிய ராமமூர்த்தி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
பாக்கியாவை ஏமாற்ற வேண்டாம் என கோபியிடம் கெஞ்சிய ராமமூர்த்தி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாக்கியாவை ஏமாற்ற வேண்டாம் என கோபியிடம் கெஞ்சிய ராமமூர்த்தி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாக்கியாவை ஏமாற்ற வேண்டாம் என கோபியிடம் கெஞ்சிய ராமமூர்த்தி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

தனது கண்ணுக்கு முன்னால் கோபி தவறு செய்தாலும் அதை தடுக்க முடியவில்லையே என ராமமூர்த்தி வருந்துகிறார். எனவே கோபியிடம் சென்று உன்னை மட்டுமே நாள் பொழுதும் நினைத்து கொண்டிருக்கும் பாக்கியாவை ஏமாற்ற நினைக்காதே என கெஞ்சும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன தான் கோபி குறித்தான அனைத்து உண்மைகளும் கோபியின் அப்பாவுக்கு தெரிந்தாலும் கோபியை எதுவுமே செய்ய முடியவில்லை. கண்ணுக்கு முன்னாடி கோபி தவறு செய்தாலும் கூட கோபி மீது ராதிகாவிற்கு துளி கூட சந்தேகம் வரவே இல்லை. இப்படி அப்பாவியாக இருக்கும் பெண்ணை கோபி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆலியா மானசா 2வது குழந்தை பிறப்புக்கு பிறகு செய்த காரியம் – வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!

குடும்பத்திலேயே கோபியின் அப்பாவிற்கு மட்டும் தான் கோபி குறித்தான அனைத்து உண்மைகளும் தெரியும். ஆனால் இந்த விஷயத்தை பாக்கியாவிடம் கூறினால் பாக்கியாவால் தாங்கி கொள்ள முடியாது என்பதால் தான் எந்த விஷயத்தையும் வெளியே கூறவே இல்லை. இதனால் கோபியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது கூட எழிலின் பட விழாவிற்கு கோபி மட்டும் வரவே இல்லை. என்னால் தான் ராதிகாவை சந்தித்து உண்மையை கூற முடியவில்லை.

எழிலிடம் ராதிகாவை தான் கோபி திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற விஷயத்தை கூறிவிடலாம் என நினைக்கிறார். எப்படியாவது ராதிகாவிற்கு உண்மையை கூறினால் தான் கோபியை விட்டு விலகுவார், ராதிகாவின் வாழ்க்கையை காப்பாற்ற முடியும் என நினைக்கிறார். இதற்கு இடையே கோபியிடமும் ராமமூர்த்தி பேசுகிறார். அதாவது பாக்கியாவின் வாழ்க்கையை நினைத்து பார். உனக்காக தான் அவ்வளவும் செய்து கொண்டிருக்கிறாள் என கூறுகிறார். ஆனால் அவர் கூறியதை கோபி காது கொடுத்து கூட கேட்கவில்லை. இதற்கு பிறகு கோபியை ஒழுங்குபடுத்த ராமமூர்த்தி என்ன நடவடிக்கை என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here