ராதிகாவிடம் வசமாக சிக்கிய கோபி – சீரியலில் வைத்த ட்விஸ்ட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
ராதிகாவிடம் வசமாக சிக்கிய கோபி - சீரியலில் வைத்த ட்விஸ்ட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ராதிகாவிடம் வசமாக சிக்கிய கோபி - சீரியலில் வைத்த ட்விஸ்ட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ராதிகாவிடம் வசமாக சிக்கிய கோபி – சீரியலில் வைத்த ட்விஸ்ட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் டிவி சீரியல்களை பொறுத்தவரையில் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் வரும் கோபி, எப்போது தன்னுடைய மனைவி பாக்கியா மற்றும் ராதிகாவிடம் வசமாக சிக்கப் போகிறார் என்பதில் தான் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் உள்ளது. இந்நிலையில் பாக்கியாவும், கோபியும் கணவன் மனைவி என்ற உண்மை ராதிகாவுக்கு தெரிந்து விட்டது. இதன்பின் சீரியல் டாப் கியரில் பறக்கும் என அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

அடுத்த ட்விஸ்ட்:

பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பிரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை ஒரங்கட்டியுள்ளது. இதற்கு காரணம், திரைக்கதையில் இருக்கும் கூடுதல் விறுவிறுப்பு தான். கோபியின் அப்பா, ராமமூர்த்திக்கு கோபி – ராதிகா பற்றிய விஷயம் தெரிந்ததில் இருந்து சீரியலில் தினமும் ஒரு ட்விஸ்ட், பரபரப்பான திரைக்கதை என பாக்கியலட்சுமி சீரியலை இயக்குனர் ட்விஸ்டுடன் எடுத்து சென்று கொண்டிருக்கிறார். கடந்த வாரம் ப்ரோமோவில் பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகள் சாப்பிட்டு, அவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் ஆகிவிட்டது.

தனது மகனின் வீடியோவை முதன் முதலில் வெளியிட்ட நடிகை ஆலியா – ரசிகர்கள் உற்சாகம்!

அதனால் போலீஸ் ராதிகா, பாக்கியாவை கைது செய்தனர். பாக்கியா போலீஸ் ஸ்டேஷன் வருவதற்குள் கோபி சாமர்த்தியமாக அங்கிருந்து சென்று விட்டார். பாக்கியாவை போலீஸ் கைது செய்த போது எழில் வீட்டில் இல்லை. இந்த வார ப்ரோமோவில், துடித்து போய் போலீஸ் ஸ்டேசனுக்கு எழில் வருகிறார். அவரை பார்த்து பாக்கியா கதறி அழுகிறார். அம்மா நீ தைரியமா இரு என எழில் ஆறுதல் கூறுகிறார். மேலும் எழில் அம்மாவை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என பல முயற்சிகளை எடுக்கிறார். அப்போது பாக்கியா சமைத்த உணவை பரிசோதனை செய்து அந்த ரிப்போர்ட்டை கோர்ட்டில் சமர்பிக்கிறார். இதன் மூலம் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு பாக்கியா காப்பற்றப்பட்டார்.

ExamsDaily Mobile App Download

பாக்கியா மீது எந்த தவறும் இல்லை, ஆஸ்ரமத்திற்கு யாரோ கொடுத்த லட்டால் தான் குழந்தைகளுக்கு உடல் நிலை குறைபாடு ஏற்பட்டது என்ற, செய்தி மறுநாள் அனைத்து சேனல்களிலும் செய்தியாக ஒளிபரப்பப்பட்டது. இதை பார்த்த ராதிகா குற்ற உணர்ச்சியில் துடிக்கிறார். டீச்சர் தவறு செய்யல நம்ம தான் தப்ப நினைச்சுட்டோம் என வருத்தப்படுகிறார். இதனால் ராதிகா பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க பாக்கியா வீட்டுக்கு செல்கிறார். அப்போ பாக்கியாவை பார்த்து ராதிகா மன்னிப்பு கேட்டு விட்டார். அந்த சமயத்துல ராமமூர்த்தி தாத்தா பாக்கியா, கோபி இரண்டு பேரும் சேந்து உள்ள போட்டோவை எடுத்து வந்து ராதிகாவிடம் காமித்து விட்டார். அந்த போட்டோவை பார்த்த ராதிகா அதிர்ச்சியில் உறைந்து, கோபியும், டீச்சரும் கணவன் மனைவியா இத்தனை நாள் கோபி நம்மள ஏமாற்றி இருக்காரு என மனதில் நினைத்து கொண்டு பாக்கியா வீட்டில் இருந்து கிளம்பி விட்டார். இதை தொடர்ந்து சீரியலில் என்ன ட்விஸ்ட் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here