வெண்பாவை வற்புறுத்தி துர்காவிற்கு திருமணம் செய்து வைக்கும் ஷர்மிளா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ ரிலீஸ்!
பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீர வேண்டும் என வெண்பா முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஷர்மிளா வெண்பாவை மிரட்டி வலுக்கட்டாயமாக துர்காவிற்கு திருமணம் செய்து வைக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாரதியுடன் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போதிலிருந்தே வெண்பா பாரதியை காதலித்து வந்தார். ஆனால், திடீரென பாரதி கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கண்ணம்மாவை எப்படியாவது பாரதியிடம் இருந்து பிரித்து பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வெண்பா திட்டம் போட்டு கொண்டிருக்கிறார். கண்ணம்மா மீது வீண் பழியை சுமத்தி கண்ணம்மாவை வெறுக்க வைத்து சந்தேகத்தை ஏற்படுத்தி பிரித்து வைத்திருக்கிறார்.
கோபி, ராதிகா பழக்கத்தை கண்டுபிடித்த தனம் – “மகா சங்கமம்” சீரியலில் இனி வருபவை!
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கண்ணம்மா மீது பாரதி சந்தேகப்பட்டு கிட்ட நெருங்க விடாமல் வெறுத்து கொண்டிருக்கிறார். பாரதி எவ்வளவு தான் கண்ணம்மாவை விட்டு தூரமாக போக நினைத்தாலும் விதி அவர்களை சேர்த்து வைக்க தான் நினைக்கிறது. தற்போது கூட பாரதியும், கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்கு நடுவே வெண்பாவின் அம்மா அமெரிக்காவில் இருந்து வெண்பாவை பார்க்க சென்னை வந்திருக்கிறார். வெண்பாவின் அம்மா வெண்பாவை விட படு வில்லியாக இருப்பார், பாரதியையும் வெண்பாவையும் சேர்த்து வைக்க உதவி செய்வார் என எதிர்பார்த்த சமயத்தில் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க தான் நினைக்கிறார்.
Exams Daily Mobile App Download
எப்படியாவது வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என தீவிரமாக வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், வெண்பா நீண்ட நாட்களாக கடத்தி வைத்திருந்த துர்கா வெண்பாவிடம் இருந்து தப்பித்து வந்து ஷர்மிளாவை சந்திக்கிறார். துர்காவை கூட வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் போலயே என ஷர்மிளாவிற்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்நிலையில், வெண்பாவை மிரட்டி துர்காவை வெண்பாவிற்கு ஷர்மிளா திருமணம் செய்து வைப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.