கோலாகலமாக அரங்கேறும் பாரதி, வெண்பா திருமணம்? கண்ணம்மா எடுக்கப்போகும் முடிவு என்ன?

0
கோலாகலமாக அரங்கேறும் பாரதி, வெண்பா திருமணம்? கண்ணம்மா எடுக்கப்போகும் முடிவு என்ன?
கோலாகலமாக அரங்கேறும் பாரதி, வெண்பா திருமணம்? கண்ணம்மா எடுக்கப்போகும் முடிவு என்ன?
கோலாகலமாக அரங்கேறும் பாரதி, வெண்பா திருமணம்? கண்ணம்மா எடுக்கப்போகும் முடிவு என்ன?

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது பாரதி மற்றும் வெண்பாவுக்கு கோலாகலமாக திருமணம் அரங்கேற இருக்கும் நிலையில், உண்மை தெரியும் கண்ணம்மா எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என்பது போல ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

தமிழ் சீரியல்களில் TRP ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ள ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் தொலைக்காட்சியில் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒவ்வொரு நாளும் பல்வேறு டிவிஸ்ட் மற்றும் திருப்பங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது. இதுவரை பாரதி தான் தன்னுடைய சொந்த அப்பா என்பதை அறிந்து கொண்ட லட்சுமி, கண்ணம்மாவை பாரதியுடன் சேர்த்து வைக்க ஹேமாவுடன் சேர்ந்து திட்டமிட்டு வருகிறார். இதனிடையே பாரதியின் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ள கண்ணம்மா கொஞ்சம் கொஞ்சமாக பாரதி மனதில் இடம்பிடித்து வருகிறார்.

கோலாகலமாக நடந்த “பாரதி கண்ணம்மா” வெண்பா திருமணம் – மாப்பிளை இவரா? ப்ரோமோ ரிலீஸ்!

இப்படி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் வெண்பாவின் அம்மா அவருக்கு திருமணம் செய்து வைக்க பெரிய திட்டத்தை போட்டிருக்கிறார். இந்த சீரியலின் கதைப்படி, சுமார் 10 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் பாரதிக்காக காத்திருக்கும் வெண்பா இப்போது அம்மாவின் கட்டளைப் படி அவர் காட்டும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டார்.

Exams Daily Mobile App Download

இதனால் வெண்பா, பாரதி மீதான தனது காதலை விட்டு கொடுப்பாரா, வேறு ஒரு திருமணத்திற்கு தயாராவாரா என்பது போல பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். இப்படி இருக்க, தற்போது பாரதி மற்றும் வெண்பாவுக்கு திருமணம் ஆவது போலவும், உண்மை தெரிந்த கண்ணம்மா எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என்றும் ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்போது தான் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே காதல் கைகூடி வரும் சமயத்தில் வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமணம் ஆவது போல வெளியான ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!