கணவர் ஹூசைன் பிறந்தநாளை கொண்டாடிய மணிமேகலை – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!

0
கணவர் ஹூசைன் பிறந்தநாளை கொண்டாடிய மணிமேகலை - ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!
கணவர் ஹூசைன் பிறந்தநாளை கொண்டாடிய மணிமேகலை - ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!
கணவர் ஹூசைன் பிறந்தநாளை கொண்டாடிய மணிமேகலை – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!

மணிமேகலையின் கணவரான ஹூசைன்க்கு நேற்று பிறந்தநாள் என்பதால் மணிமேகலை சர்ப்ரைசாக புதிதாக வாங்கிய நிலத்தில் வைத்து கேக் வெட்டி கொண்டாடும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மணிமேகலை:

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ”ப்ரீயா விடு” என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் தான் மணிமேகலை. இதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்று பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளினியாக தனது இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். ஆரம்பத்தில் சிவாங்கியின் குறும்புக்காக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பலரும் பார்த்து வந்தனர். ஆனால், தற்போது மணிமேகலைக்காக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பலரும் பார்த்து வருகின்றனர்.

“பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி பரீனாவின் மகனா இது? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

மணிமேகலையும், மணிமேகலையின் கணவரான ஹூசைன்னும் அடிக்கும் அரட்டைக்கு அளவே கிடையாது. அவ்வப்போது இருவரும் சேர்ந்து மேற்கொண்ட வெளியூர் பயணம் என அனைத்தையும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டபடி இருப்பார். இருவரும் சேர்ந்து ஹூசைனின் கிராமத்தில் ஒரு இடம் வாங்கியிருக்கின்றனர். இவர்கள் வாங்கும் சம்பளத்தை சேமித்துவைத்து கனவு இல்லத்தை கட்ட பிளான் போட்டிருக்கின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் மணிமேகலை மற்றும் ஹூசைன் இருவரின் பிறந்தநாளையும் கிராமத்தில் வைத்து கொண்டாடுவது தான் வழக்கம்.

Exams Daily Mobile App Download

சமீபத்தில் மணிமேகலையின் பிறந்தநாளையும் கிராமத்தில் வைத்து தான் கொண்டாடினர். தற்போது ஹூசைன் பிறந்தநாளை தற்போது புதிதாக வாங்கியுள்ள நிலத்தில் வைத்து கொண்டாடியுள்ளனர். தற்போது தான் அந்த நிலத்தில் போர் போட்டுள்ளனர். பிறந்தநாள் அன்றே இனிய துவக்கத்துடன் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு பிறந்தநாள் போதும் நீ இதே மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் ஹூசைன்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!