“பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி பரீனாவின் மகனா இது? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியல் வில்லி பரீனாவின் மகனா இது? வைரலாகும் குடும்ப புகைப்படம்!
“பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி பரீனாவின் மகனா இது? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இளம் வில்லியாக களமிறங்கி மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை பரீனா. அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பரீனா:

பாரதி கண்ணம்மா வெண்பா என்றால் அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு பிரபலமானவர் நடிகை பரீனா. சின்னத்திரையில் இப்படி ஒரு வில்லியா என அனைவரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு தன்னுடைய வில்லத்தனத்தால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர். பாரதி கண்ணம்மா சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்க காரணமே கதை தான் அந்த கதைக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தவர் தான் வெண்பா என்பதால் பலர் அவருடைய நடிப்பிற்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

முல்லையுடன் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் தனம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!

இந்நிலையில் பரீனாவிற்கு ரகுமான் என்பவருடன் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அவர் ஆண் குழந்தைக்கு தாயானார். அவருடைய பையனிற்கு ZAYN என பெயர் வைத்துள்ளார். கர்ப்பக் காலத்தில் பல போட்டோஷூட்களை நடத்தி வந்த அவர் குழந்தை பிறந்த பின் குழந்தையின் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டார்.

Exams Daily Mobile App Download

பரீனா நேற்று தனது குடும்பத்துடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய நிலையில் தனது மகன் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் அவருடைய மகன் மிகவும் அழகாக இருப்பதாகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் நிறைய புகைப்படங்களை பதிவிடுங்கள் என ஒரு சிலர் கமெண்ட் செய்வது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!