அமுதவாணனை கோவப்படுத்திய அசிம்.. முட்டிக் கொண்ட சண்டை – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ ரிலீஸ்!

0
அமுதவாணனை கோவப்படுத்திய அசிம்.. முட்டிக் கொண்ட சண்டை -
அமுதவாணனை கோவப்படுத்திய அசிம்.. முட்டிக் கொண்ட சண்டை - "பிக்பாஸ் சீசன் 6" ப்ரோமோ ரிலீஸ்!
அமுதவாணனை கோவப்படுத்திய அசிம்.. முட்டிக் கொண்ட சண்டை – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடிலும் பொம்மை டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை அசிம், தனம் இடையே சண்டை நடந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் அமுதவாணன் அசிம் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 18வது நாள் நடந்து வருகிறது. இதுவரை இருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சென்றுள்ளனர். மேலும் தற்போது வீட்டிற்குள் 19 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அவர்களில் அசிம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரட்சிதா, adk, ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அந்த வகையில் போட்டியாளர்களுக்கு தற்போது பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

19 பேரும் கடுமையாக போட்டி போட்டு வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்து வரும் பொம்மை டாஸ்கில் போட்டியாளர்கள் இடையே பயங்கரமாக சண்டையும், தள்ளு முள்ளும் நடந்துள்ளது. மேலும் ஷெரினாவை தனம் கீழே தள்ளிவிட்டார் என நினைத்து அசிம் அவருடன் பயங்கரமாக சண்டை போடுகிறார். ஆனால் தனலட்சுமி நான் தள்ளிவிடவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

“பாக்கியலட்சுமி” சீரியல் ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? பலரும் பார்த்திராத புகைப்படம்! இணையத்தில் வைரல்!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இன்றைய எபிசோடும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் அமுதவாணன் பொம்மையை ஷெரினா எடுத்து வைக்க, அதனால் கோவப்பட்ட அவர் ஷெரினாவிடம் இருந்து பொம்மையை வாங்குகிறார். உடனே அசிம் கோவப்பட்டு பேச, அமுதவாணன் சண்டை போடுகிறார். இப்படி எல்லாரிடமும் அசிம் சண்டை போடுவதால் அவர் இந்த வாரம் வெளியேற அதிகம் வாய்ப்புள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!