பொம்மை டாஸ்கில் சகட்டு மேனிக்கு சண்டை போட்ட மகேஸ்வரி, தனலட்சுமி – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ!

0
பொம்மை டாஸ்கில் சகட்டு மேனிக்கு சண்டை போட்ட மகேஸ்வரி, தனலட்சுமி -
பொம்மை டாஸ்கில் சகட்டு மேனிக்கு சண்டை போட்ட மகேஸ்வரி, தனலட்சுமி - "பிக்பாஸ் சீசன் 6" ப்ரோமோ!
பொம்மை டாஸ்கில் சகட்டு மேனிக்கு சண்டை போட்ட மகேஸ்வரி, தனலட்சுமி – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் தற்போது மூன்றாவது வாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது அனைத்து சீசன்களிலும் சண்டைக்கு காரணமாக இருக்கும் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மகேஸ்வரி, தனலட்சுமி சண்டை போடும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மூன்றாவது வாரத்தில் 19 போட்டியாளர்கள் அடியெடுத்து வைத்துள்ளனர். இதுவரை இருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், பலர் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். மேலும் இந்த வார தலைவராக குயின்சி இருக்கிறார். மேலும் போட்டியாளர்கள் இடையே சண்டை, பாசம் என அனைத்தும் கலந்து கலவையாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போல இல்லாமல் போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் கமல் சார் போட்டியாளர்கள் மத்தியில் பாரபட்சம் பார்க்காமல் கேள்விகளை கேட்டு அறிவுரை கூறி வருகிறார். தற்போது விளையாடி வரும் போட்டியாளர்களில் யார் வெற்றியாளர் என்பது இன்னும் சில நாட்களில் கணிக்க முடியும். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பொம்மை டாஸ்க் நடைபெறுகிறது. அதாவது கடந்த சீசன்களில் போட்டியாளர்கள் மத்தியில் அதிக சண்டையை கிளப்பிய விளையாட்டு என்றால் அது பொம்மை டாஸ்க் தான்.

பாரினுக்கு படையெடுத்துள்ள விஜய் டிவி பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்..! குவியும் லைக்குகள்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பொம்மை டாஸ்கில் மகேஸ்வரி பொம்மையை தனலட்சுமி கொண்டு செல்லாமல் இருக்க, மகேஸ்வரி பொம்மையை கொண்டு சென்றால் நான் safe ஆகிவிடுவேன் என சொல்கிறார். ஆனால் தனலட்சுமி இது வெறும் கேம் தான என சொல்ல, நீங்க சொல்வது எனக்கு பர்சனலாக தெரிகிறது என சொல்கிறார் மகேஸ்வரி. அதை கேட்ட தனலட்சுமி ஆமாம் பர்சனல் தான் என சொல்ல மகேஸ்வரிக்கு கோவம் வருகிறது. இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!