மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதியில் பெரிய மாற்றம் – முழு விவரம் இதோ!

0
மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதியில் பெரிய மாற்றம் - முழு விவரம் இதோ!
மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதியில் பெரிய மாற்றம் - முழு விவரம் இதோ!
மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதியில் பெரிய மாற்றம் – முழு விவரம் இதோ!

பீகார் மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ், இறந்த ஊழியர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ், இறந்த ஊழியர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தின் பலனை வழங்க முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த செயல்முறைகளை நடைமுறைப்படுத்த, மாநில நிதித்துறை செயலாளர் தலைமையில் தற்போது ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது அறிக்கையை ஜூன் மாத இறுதிக்குள் மாநில அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்போது பிகார் அரசாங்கம் ஆலோசித்து வரும் ஓய்வூதியம் குறித்த புதிய விதிகளின்படி, இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கைகளின் படி, புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் இந்த நன்மையைப் பெறலாம் என்றும் அதற்காக அவர்கள் முன்கூட்டியே இந்த விருப்பத்தைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி செய்தால் NPSன் கீழ் வரும் பழைய ஊழியர்களை சார்ந்திருப்பவர்கள் இந்த பலனைப் பெற முடியும்.

HAL இந்தியா நிறுவனத்தில் வேலை – ஒரு வருகைக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியம்..!

இது தவிர மாநில அரசு ஊழியர் ஒருவர் இறந்தால், அவரது குடும்பத்தார்கள் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 50 சதவீதத்தை 7 ஆண்டுகளுக்கு ஓய்வூதியமாகப் பெறுவார்கள். இந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அடிப்படை மற்றும் அகவிலைப்படியில் 30% தொகை கிடைக்கும். உதாரணமாக, ஒரு ஊழியர் இறக்கும் போது அடிப்படைச் சம்பளம் 50 ஆயிரமாக இருந்தால், குடும்ப ஓய்வூதியமாக 25 ஆயிரமும், அகவிலைப்படியும் 7 ஆண்டுகளுக்குப் பெற முடியும். மேலும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அடிப்படைத் தொகையில் 30 சதவீதம் அதாவது 15 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி தொகை ஓய்வூதியமாக கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here