HAL இந்தியா நிறுவனத்தில் வேலை – ஒரு வருகைக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியம்..!
தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL India) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Visiting Consultant (Anaesthesiology) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Hindustan Aeronautics Limited (HAL India) |
பணியின் பெயர் | Visiting Consultant (Anaesthesiology) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
HAL India காலிப்பணியிடங்கள்:
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Visiting Consultant (Anaesthesiology) பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
HAL India கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்களில் Anaesthesiology பாடப்பிரிவில் MBBS உடன் DNB / MS போன்ற டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
HAL India முன் அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் இதில் Teaching அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
HAL India வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 ம் தேதியின் 65 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
HAL India ஊதியத் தொகை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வாகும் பணியாளர்கள் ஒரு வருகைக்கு ரூ.5,000/- ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொகை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
HAL India தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
HAL India விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் வாயிலாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து 21.06.2022 ம் தேதிக்குள் வரும்படி தபால் செய்ய வேண்டும்.