‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்

0
'பிக் பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்
'பிக் பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்
‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்

சின்னத்திரையில், சீரியல்களை தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீரியல்களுக்கென்று ஒருபக்கம் ரசிகர் கூட்டம் இருந்தாலும் கூட, ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மனதில் தனி இடம் பிடித்து உள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் மூன்றாவது ரன்னர்-அப்பாக வந்த தாமரை செல்வி எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

தாமரை செல்வி வாங்கிய சம்பளம் :

மக்கள் அதிகம் விரும்பும் முன்னணி தமிழ் சேனல்களில் ஒன்றாக இருப்பது ஸ்டார் விஜய் டிவி, இந்த சேனலில் சீரியலை தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களுக்குதான் அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பிக்பாஸின் 5 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி இருக்கிறது. மேலும் இந்த 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டு OTT வெர்ஷன் பிக்பாஸ் ரசிகர்களின் ஆதரவை தக்கவைக்க, அறிமுகம் செய்யப்பட்டது. பிக்பாஸ் அல்ட்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், வெற்றிகரமாக நிறைவடைந்தது உள்ளது.

பாக்கியா, கோபி & ராதிகா மூன்று பேரையும் கைது செய்த போலீசார் – கோபியின் நிலை கவலைக்கிடம்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24*7 லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் அல்ட்டிமேட், வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி பெரியசாமி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 14 போட்டியாளர்களுடன் தொடங்கியது. 24 மணி நேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை துவக்கத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின் சில காரணங்களால் அவர் விலகவே அவருக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

பின்னர் வைல்டு கார்டு என்ட்ரியாக ரம்யா பாண்டியன், சதீஷ் நுழைந்தனர். இறுதியாக பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1-ன் வின்னர் ஆனார். சீசன் 5-ல் கோட்டை விட்ட தாமரை செல்வி வெல்ல வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி வரை போராடிய தாமரை மூன்றாவது ரன்னர்-அப் ஆனார். இந்நிலையில் பிக்பாஸ் அல்ட்டிமேட் நிறைவடைந்தவுடன் தாமரை செல்வி, தனது மாமியாரை நேரில் சென்று பார்த்து ஆசீர்வாதம் பெற்று கொண்டுள்ளார். தாமரை செல்வி தனது மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினரை சந்தித்துள்ள போட்டோக்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தாமரை செல்வி, பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் பங்கேற்க வாரத்திற்கு ரூ.80 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பளம் குறித்துதான் சோஷியல் மீடியாவில் அதிக பேசப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!