பிக் பாஸ் அல்டிமேட் எண்டுக்கு வரவுள்ள நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆவது இவரா? ரசிகர்கள் ஷாக்!

0
பிக் பாஸ் அல்டிமேட் எண்டுக்கு வரவுள்ள நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆவது இவரா? ரசிகர்கள் ஷாக்!
பிக் பாஸ் அல்டிமேட் எண்டுக்கு வரவுள்ள நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆவது இவரா? ரசிகர்கள் ஷாக்!
பிக் பாஸ் அல்டிமேட் எண்டுக்கு வரவுள்ள நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆவது இவரா? ரசிகர்கள் ஷாக்!

ரியாலிட்டி ஷோவுக்கு பஞ்சமில்லாத விஜய் டிவி யில் ஆரம்பமாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறு உருவமான பிக் பாஸ் அல்டிமேட் ஷோ முடிவுக்கு வரும் நிலையில் இந்த வாரம் மக்களிடையே பிரபலமான ஒருவர் எலிமினேட் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட்:

விஜய் டிவி தொலைக்காட்சியில் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இல்லாத வகையில் புதுப்புது நிகழ்ச்சிகள் மக்களை என்டர்டைன் செய்வதற்க்காக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறு உருவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 60 முதல் 70 நாட்கள் வரை 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் ஆரம்பமாகிய ஷோ தான் இது. கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் இதில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இவ்வாறு 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி பிக் பாஸ் ஷோக்கு கிடைத்த ரீச் அளவுக்கு இதற்கு ரீச் இல்லை என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் சுரேஷ் எலிமினேட் ஆனது அடுத்து சுஜா, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன், அனிதா,என அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினார்கள். இதில் உள்ள எல்லா போட்டியாளர்களும் விளையாட்டை உண்மையாக விளையாடாமல் ஒரு மாதிரி Safe Game தான் விளையாடினார்கள். ஆனாலும் இந்த ஷோவை சிலர் கமலுக்கு பதிலாக என்ட்ரி கொடுத்த நடிகர் சிம்புக்காக பார்த்து வந்தனர்.

இதை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி இறுதிக்கட்ட நிகழ்ச்சி வரவுள்ள நிலையில் இந்த வாரம் பாலாஜி, நிரூப், ஜுலி, தாமரை, ஸ்ருதி, ரம்யா, அபிராமி எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகி இருந்தார்கள். இவர்களில் இதுவரை குறைவான வாக்குகளை போட்டியாளர்களில் ஒருவரான, மக்களிடத்தில் பிரபலமான பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்ட அபிராமியே பெற்றிருக்கிறார். அதனால் அவரே இந்த வாரம் எலிமினேட் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த கட்டமாக குறைவான வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் ரம்யா பாண்டியன் வெளியேறவும் வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!