OTT ‘பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் களமிறங்கும் டாப் போட்டியாளர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் மிகப்பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதன் மாறுபட்ட புதிய நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி:
இந்தியாவில் முதலில் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்பட்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி, சில வருடங்களுக்கு முன்னதாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாக தொடங்கியது. தமிழில் உலக நாயகன் கமலை வைத்தும், மற்ற மொழிகளில் அதன் முன்னணி நடிகர்களை வைத்தும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தற்போது தமிழில் 5 வது சீசன் வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஆனால் நிகழ்ச்சியின் ரேட்டிங் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும், இதனால் அடுத்ததாக 6 வது சீசன் டிவியில் ஒளிபரப்பாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் ரோட்டு கடை அனுபவம் – வைரலாகும் வீடியோ!
கூடுதல் தகவலாக முதல் 5 சீசனுக்கு மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் நிகழ்ச்சியின் கான்செப்ட் சொந்தக்காரர்களான எண்டமால் நிறுவனத்துடன் விஜய் டிவி மேலும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி ஓடிடி தலத்தில் வெளியாக உள்ள இந்த புதிய நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய நிகழ்ச்சியில் முன்னதாக சீசன்களில் வந்த போட்டியாளர்கள் தான் கலந்து கொள்ள போகிறார்கள். பலர் இதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில். ஒரு சில பழைய போட்டியாளர்கள் மற்றும் புது முகங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
“பாரதி கண்ணம்மா” வில்லி வெண்பா 2021ல் கடந்து வந்த பாதை – அவரே வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!
மொத்தம் 42 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். தெலுங்கு ஓ.டி.டி.யை அதன் தொகுப்பாளரான நாகார்ஜுன் தான் தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் ஓ.டி.டி.யை தொகுத்து வழங்க போவதும் கமல் தான் என்று பலரும் கூறி வருகின்றனர். ஜனவரி மாத இறுதியில் தமிழ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாகவும், தெலுங்கு நிகழ்ச்சி பிப்ரவரி மாத இறுதியிலும் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.