எல்லாம் கைமீறி போச்சு.. மணக்கோலத்தில் வெண்பாவும், பாரதியும்.. குமுறும் ரோஹித் – வைரல் அப்டேட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது எதிர்பார்த்த காட்சிகள் ஒளிபரப்பாகி வருவதால், விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெண்பா பாரதி திருமண கோலத்தில் இருப்பது போல வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல உண்மைகள் வெளியே வந்து கதையில் சுவாரசியம் அதிகமாகி இருக்கிறது. அதாவது வெண்பா உண்மையை மறைத்து பாரதியை திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால் பாரதி கண்ணம்மா சொன்னது போல இது என்னுடைய குழந்தைகளாக இருக்குமா என்ற சந்தேகத்தில் யாருக்கும் தெரியாமல் DNA டெஸ்ட் எடுக்கிறார். அதன் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
மறுபக்கம் வெண்பா ரோஹித் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆனால் வெண்பா திருமண மண்டபத்தில் இருந்து தப்பித்து செல்கிறார். அதனால் கண்ணம்மாவிற்கு சந்தேகம் வர, சாந்தியிடம் உண்மையை தெரிந்து கொண்டு கோவிலுக்கு செல்கிறார். அங்கே வெண்பா கழுத்தில் பாரதி தாலி கட்ட செல்ல ஆனால் கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் அதை தடுக்கின்றனர். பாரதியிடம் காரணம் கேட்க, வெண்பாவின் குழந்தைக்கு சமூக அந்தஸ்து வேண்டும் என சொல்கிறார். உடனே ரோஹித் வெண்பா வயிற்றில் வளருவது என் குழந்தை என சொல்ல, வெண்பாவால் ஏமாற்றப்பட்டோம் என பாரதி உணருகிறார்.
ஷாக்கிங் தகவல்.. அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சீரியல்கள்.. பிரபல சேனலில் வர போகும் முக்கிய மாற்றம்!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் ரோஹித் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சபரி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். அதில் வெண்பாவும், பாரதியும் மாலையும் கழுத்துமாக மண மேடையில் கொஞ்சி கொண்டிருக்க அதை பார்த்து ரோஹித் கடுப்பில் நிற்கிறார். இந்த வீடியோவை முதலில் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை வெண்பா பாரதி திருமணம் நடந்துவிடுமோ என நினைத்தனர். ஆனால் அது பழைய வீடியோ என்பதும், அதில் வரும் காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பாகி முடிந்துள்ளதால் இனி இப்படி நடக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாக தெரிகிறது.