விரைவில் முடிவடையும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – வைரலாகும் தகவல்!

0
விரைவில் முடிவடையும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் - வைரலாகும் தகவல்!
விரைவில் முடிவடையும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் - வைரலாகும் தகவல்!
விரைவில் முடிவடையும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – வைரலாகும் தகவல்!

விஜய் டிவியில் டாப் சீரியலாக இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா தொடர். டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடங்களில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் வெண்பாவின் திருமணம் நடந்தால் மொத்த கதையும் ஓவர் என்பது போல் சீரியல் ஸ்டோரி வந்து நிற்கிறது. இந்நிலையில் தற்போது முக்கிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக தொய்வில் இருந்த பாரதி கண்ணம்மா தொடர் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அண்மையில் பாரதிக்கு ஹேமா மற்றும் லக்ஷ்மி குறித்த உண்மைகள் தெரியவந்துள்ளது. அதாவது ஹேமா பிறந்தநாள் விழாவில் தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை கொடுப்பதாக பாரதி ஹேமாவிற்கு உறுதியளிக்கிறார். அதன்படி தன்னுடைய பழைய காதலியின் புகைப்படத்தை அவர் காண்பிக்க இதையடுத்து பொங்கி வெடிக்கிறார் கண்ணம்மா. தன்னுடைய மகளுக்கு யாரையோ அம்மாவாக காண்பிப்பதை அவரால் ஏற்க முடியவில்லை.

இதையடுத்து தான் தான் ஹேமாவின் அம்மா என்ற உண்மையை அனைவர் முன்னிலையிலும் போட்டுடைக்கிறார். இதையடுத்து இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மறுபுறம் கடந்த சில வாரங்களாக காணாமல் போயிருந்த வெண்பாவின் அம்மா ஷர்மிளா தற்போது மீண்டும் சீரியலில் சேர்ந்துள்ளார். இதை தொடர்ந்து வெண்பா- ரோஹித் நிச்சயம் நடந்து முடிந்தது. இதையடுத்து நிச்சயம் முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இருப்பினும் வெண்பா வீட்டுக்கு போகாமல் ஹோட்டலிலே இருந்தார். அப்போது சரக்கு பாட்டிலுடன் வரும் ரோஹித் வெண்பாவை வெறுப்பேற்றி குடிக்க வைக்கிறார். இதையடுத்து, வெண்பாவும், ரோஹித்தும் நிதானம் தவறி விடுகிறார்கள்.

அவமானத்தை சந்தித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் – வைரலாகும் பதிவு!

Exams Daily Mobile App Download

மேலும் காலையில் எழுந்த வெண்பா, வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது அங்கே சாந்தியிடம் நடந்த விஷத்தை கூறுகிறார். அந்த சமயத்தில் கண்ணம்மா, வெண்பா வீட்டிற்கு வர அனைத்து உண்மைகளும் அவருக்கு தெரிந்து விடுகிறது. இதையடுத்து கண்ணம்மா, இனி உன்னால என் வாழ்க்கைக்கு பிரச்சனை இல்லை என வெறுப்பேற்றுகிறார். இதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே வெண்பா செல்கிறார். தொடர்ந்து பாரதி கண்ணம்மா தொடர் நிறைவடைய உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. அதை உறுதி செய்யும் வகையில் தற்போது இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதையடுத்து சீரியல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!