அவமானத்தை சந்தித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் – வைரலாகும் பதிவு!

0
அவமானத்தை சந்தித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர் - வைரலாகும் பதிவு!
அவமானத்தை சந்தித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர் - வைரலாகும் பதிவு!
அவமானத்தை சந்தித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் – வைரலாகும் பதிவு!

தமிழ் திரையுலகில் பரபரப்பாக நடித்து கொண்டிருக்கும் முன்னணி நடிகரான விஜயின் வாரிசு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவல் சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரமான மீனாவின் தந்தையாக வருபவர் நடிகர் ரவிச்சந்திரன். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தவிர பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து வெள்ளித்திரையில் நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் கும்பகோணத்தில் மசாலா கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார்.

பிறகு நண்பர்கள் உதவியுடன் பல விளம்பர படங்களில் நடித்த இவருக்கு டிவி, சினிமா என்று வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இந்நிலையில் சமீபத்தில் இவரை சந்தித்து பிரபல சேனல் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது. அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு வாரிசு படத்தில் நடிக்க இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தது. இதை அடுத்து நானும் இயக்குநரின் முன் சென்று நின்ற சில நிமிடங்களில் அவர் என்னை மேலும், கீழும் பார்த்து விட்டு உதவி இயக்குனரிடம் காதில் ஏதோ சொல்லிவிட்டு சென்று விட்டார். அதன் பிறகு என்னை சந்தித்த உதவி இயக்குனர் உங்களுடைய லுக் ரிச்சாக உள்ளது என்று இயக்குனர் உங்களை கிளம்ப சொல்லிட்டார்.

பாக்கியாவை எதிர்த்து வில்லியாக மாறும் ராதிகா, கவலையில் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

Exams Daily Mobile App Download

இதை கேட்ட நான் மேக்கப் மூலம் சரி செய்யலாம் என்று கேட்டதற்கு அவர்கள் அதை பற்றி காதில் கூட வாங்கவில்லை. நடிக்க வைத்து உனக்கு நடிப்பு வரவில்லை என்று சொல்லி அனுப்பி இருந்தார்கள் என்றால் கூட எனக்கு இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது. மேலேயும், கீழேயும் பார்த்துவிட்டு போ என்று சொன்னது ரொம்ப கஷ்டமாக இருந்தது. பிறகு விஜய் சாரிடம் இதை பற்றி சொல்லுங்க அப்டினு சொன்னாங்க . நானும் விஜய் சாரை பார்க்கணும் என்று கேட்டேன், அதற்கு விஜய் சாரிடம் எல்லாம் இதை பத்தி சொல்லாதீங்க நாங்க உங்களுக்கு ஒரு நாள் சம்பளத்தை தந்து விடுகிறோம் என்றனர். எனக்கு ஒரு நாள் சம்பளமும் வந்தது. எதுக்கு ஒரு நடிகரை கூப்பிட்டு இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று மனவேதனையுடன் நடிகர் ரவிச்சந்திரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!