விரைவில் முடிவிற்கு வர இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்! ப்ரோமோ ரிலீஸ்!

0
விரைவில் முடிவிற்கு வர இருக்கும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் - ரசிகர்கள் ஷாக்! ப்ரோமோ ரிலீஸ்!
விரைவில் முடிவிற்கு வர இருக்கும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் - ரசிகர்கள் ஷாக்! ப்ரோமோ ரிலீஸ்!
விரைவில் முடிவிற்கு வர இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்! ப்ரோமோ ரிலீஸ்!

பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு படிப்படியாக அனைத்து உண்மைகளும் தெரியவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கூடிய விரைவில் சீரியல் நிறைவடைய போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வந்தபடியே இருந்து வருகிறது. அதாவது, தற்போது தான் பாரதிக்கு ஹேமாவும் கண்ணம்மாவின் குழந்தை தான் என்கிற உண்மை தெரிய வந்திருக்கிறது. எப்படியும் சௌந்தர்யா உண்மையை பாரதியிடம் கூறமாட்டார் இன்னும் சில நாட்கள் சீரியலை ஓட்டுவார்கள் என எதிர்பார்த்த நேரத்தில் சௌந்தர்யாவும் ஹேமாவும் கண்ணம்மாவுடைய பொண்ணு தான் என்கிற அனைத்து உண்மையையும் கூறிவிடுகிறார்.

ஆதார் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – செப்டம்பர் 9 விண்ணப்பிக்க இறுதி நாள்!

அதாவது, கண்ணம்மாவிற்கு தெரியாமலேயே ஹேமாவை தூக்கி வந்து பாரதியிடம் கொடுத்தது என அனைத்தையும் பாரதியிடம் கூறிவிடுகிறார். இதற்கு பிறகு, பாரதி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார். நாளுக்கு நாள் அடுத்தடுத்து உண்மைகள் அனைத்தும் பாரதிக்கு தெரிந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அனைத்து குழப்பங்களுக்கும் வெண்பா தான் காரணம் என்கிற உண்மை மட்டும் தற்போது வரைக்கும் பாரதிக்கு தெரியவில்லை.

 

Exams Daily Mobile App Download

கூடிய விரைவில் வெண்பா பற்றிய உண்மையும் பாரதிக்கு தெரியவந்து சீரியல் நிறைவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது மற்றும் இன்னும் சில நாட்களில் வெண்பாவிற்கும் ரோஹித்திற்கும் திருமணம் நடைபெற போவதாகவும் சீரியல் செல்ல இருக்கிறது. இதற்கு இடையே துர்கா வந்து எதுவும் பிரச்சனை செய்வாரா என்பது தெரியவில்லை. துர்கா வந்து கூட வெண்பாவை பற்றிய அனைத்து உண்மையையும் பாரதியிடம் கூற அதிக வாய்ப்பிருக்கிறது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here