கண்ணம்மா மீது தவறு இருக்காதோ என நினைக்கும் பாரதி – கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வாரா?

0
கண்ணம்மா மீது தவறு இருக்காதோ என நினைக்கும் பாரதி - கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வாரா?
கண்ணம்மா மீது தவறு இருக்காதோ என நினைக்கும் பாரதி - கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வாரா?
கண்ணம்மா மீது தவறு இருக்காதோ என நினைக்கும் பாரதி – கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வாரா?

பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்து வருவதால் இருவரும் சேர வாய்ப்பிருக்கிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். டிஆர்பி லும் பாரதிகண்ணம்மா தொடர் முன்னிலையில் இருந்து வருகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா தொடர் சறுக்கிய நிலையில் தான் சென்றது. அதாவது பாரதி எப்போதுதான் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டால் கதையே முடிவடைந்துவிடும். அதை மட்டும் செய்யாமல் சீரியலை இழுத்துக்கொண்டு இருப்பதாக ரசிகர்கள் எரிச்சல் அடைந்தனர்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி – அதிரடி உத்தரவு வெளியீடு!

டிஆர்பி லும் பாரதிகண்ணம்மா சீரியல் சில வாரங்களாக பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தது. இதனால் எப்படியாவது பாரதிகண்ணம்மா சீரியல் முன்னிலைக்கு கொண்டு வர இயக்குனர்கள் மிகவும் முயற்சி செய்தனர். இதனால் சீரியலில் புதிதாக விக்ரம் மற்றும் ஷர்மிளா ஆகிய இரண்டு கதாபாத்திரத்தை இறக்கி உள்ளனர். அதாவது வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா சீரியலில் புதிதாக எண்ட்ரியாகி உள்ளார். ஷர்மிளா வெண்பாவை விட படு வில்லியாக இருப்பார் என எதிர்பார்த்த சமயத்தில் பாரதியையும் கண்ணம்மாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் விக்ரம் மருத்துவமனையில் சீப் டாக்டராக வேலைக்கு செல்கிறார். அதே மருத்துவமனையில் தான் கண்ணம்மாவும் வேலைக்கு சேருகிறார். ஒரே மருத்துவமனையில் இருவரும் இருந்தால் கண்ணம்மாவை புரிந்துகொள்ள பாரதிக்கு வாய்ப்பு கிடைக்கும். எப்படியும் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் பாரதிகண்ணம்மா சீரியல் முன்னிலையில் இருந்துவருகிறது. கண்ணம்மா செய்யும் செயல்களை பார்த்தால் ஒருவேளை கண்ணம்மா தவறு செய்திருக்க மாட்டார். நான் தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோமோ என பாரதி நினைக்கும் படியான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!