தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி – அதிரடி உத்தரவு வெளியீடு!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - அதிரடி உத்தரவு வெளியீடு!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - அதிரடி உத்தரவு வெளியீடு!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி – அதிரடி உத்தரவு வெளியீடு!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலம் முடிவடைந்ததை ஒட்டி, தமிழகத்தின் மக்களுக்காக 5 முக்கிய திட்டங்களை 110 விதியின் கீழ் நேற்று சட்டசபையில் அறிவித்துள்ளார். இந்த திட்டங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்வரின் முக்கிய திட்டங்கள்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஊரோடு காலம் நேற்றோடு எட்டி இருக்கிறது. இதை நினைவு கூறும் விதமாக தமிழக முதல்வர் நேற்று பல சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பிறகு சட்டசபைக்கு வருகை தந்தார். நேற்று கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டு, முதல்வர் நேரடியாக 110 விதியின் கீழ் முதல்வர் அறிக்கைகளை வாசித்தார். அப்போது, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் அதிர்ச்சிகர விஷயம் – அடுத்து வரும் எபிசோட்!

இந்த 1 ஆண்டு காலத்தில் தான் தமிழக மக்களுக்கு உண்மையாக பணியாற்றிய பெருமையுடன் தான் தலை நிமிர்ந்து நிற்பதாக கூறினார். தனது கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்த அனைவர்க்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மக்களுக்கு உதவும் வகையில் மேலும் 5 முக்கிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டி வர இருப்பதாக தெரிவித்தார். அதன்படி, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்க பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. ரூ.150 கோடி மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலை பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். படிப்புடன் சேர்ந்து அவர்களது தனித்திறன்கள் அனைத்தும் வளர்த்தெடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும். 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்களிலும், காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இரு வேளைகளிலும் புறநோயாளிகள் சேவைகள் செயல்படுத்தப்படும். 234 தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசிய தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பரிசீலனை செய்வார்கள். அடுத்து வரும் நிதி ஆண்டுகளில் இந்த பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here