தனது கணவருக்காக நடுரோட்டில் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினா தனது கணவருக்கு நடு ரோட்டில் வைத்து சர்பிரைஸ் கொடுத்துள்ள வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை பரினா
தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பல ட்விஸ்டுகள் நிறைந்ததாக காணப்பட்டு வருகிறது. அதாவது இத்தொடரில், பல ஆண்டுகாலமாக பிரிந்திருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சில நாட்களாக ஒன்றிணைந்து வாழ துவங்கியுள்ளனர். இது பாரதிக்கு பிடிக்கவில்லை என்றாலும் கோர்ட்டின் உத்தரவுப்படி வேறு வழியில்லாமல் இதற்கு சம்மதித்திருக்கிறார். இது நன்மைக்கே என்று எண்ணுவது போல பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் இடையே ஒரு சில புரிதல் உண்டாகி இருக்கிறது.
ஜன.15 முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இத்தொடரில் பாரதி, கண்ணம்மாவுக்கு இடையே நடைபெற்ற மோதல், பிரிவு என எல்லாவற்றுக்கும் காரணமான வெண்பா கதாப்பாத்திரம் சில நாட்கள் பிரேக் எடுத்த பின்பாக மீண்டும் திரையில் தோன்றி இருக்கிறது. அதாவது தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக சில காலம் சீரியலை விட்டு விலகி இருந்த நடிகை பரினா சமீபத்தில் மீண்டும் வெண்பாவாக களமிறங்கி இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு ரஹ்மான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை பரினா சமீபத்தில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.
அந்த குழந்தைக்கு சயன் லாரா ரஹ்மான் என்று பெயரிட்ட பரினா, குழந்தையை வைத்து பல்வேறு போட்டோஷூட்களை நடத்தி அதனை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்ய இந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலானது. இதற்கிடையில் நடிகை பரினா தான் கர்ப்பமாக இருப்பதை தனது கணவருக்கு தெரிவித்த அந்த தருணத்தை ஒரு வீடியோவாக எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையாக அறிமுகமாகும் நடிகை தேஜஸ்வினி – ஷாக் ப்ரோமோ!
இது தொடர்பான வீடியோவில், நடிகை பரினா மற்றும் அவரது கணவர் ரஹ்மான் இருவரும் ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வருவதை போலவும், அவர்களை சுற்றி சில இளைஞர்கள் ஆடுவதை போலவும் சில காட்சிகள் இடம்பிடித்திருந்தது. தொடர்ந்து இந்த சர்ப்ரைஸ் எதற்காக என ரஹ்மான் வியந்து பார்த்துக்கொண்டிருக்க பரினா, தனது பிரக்னன்சி கிட்டை எடுத்து கணவரிடம் காட்டுகிறார். இப்போது சந்தோஷமடைந்த இவர்கள் இருவரும் கட்டியணைத்து கொள்கின்றனர். இந்த வீடியோவை நடிகை பரினா இன்ஸ்டா பக்கத்தில் ரீஷேர் செய்ய அது மீண்டுமாக ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்