விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையாக அறிமுகமாகும் நடிகை தேஜஸ்வினி – ஷாக் ப்ரோமோ!

1
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லையாக அறிமுகமாகும் நடிகை தேஜஸ்வினி - ஷாக் ப்ரோமோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லையாக அறிமுகமாகும் நடிகை தேஜஸ்வினி - ஷாக் ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையாக அறிமுகமாகும் நடிகை தேஜஸ்வினி – ஷாக் ப்ரோமோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யாவுக்கு பதிலாக, நடிகை தேஜஸ்வினி நடிக்க இருப்பதை போல வெளியான எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரை தொடர்களில் அதிகபட்சமான மக்களின் வரவேற்புகளை பெற்றுள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது சில ஸ்வாரசியமான திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது, இத்தொடர் தற்போது மீனா மற்றும் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்திற்கு இடையே நடைபெறும் சில முட்டல் மோதல்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்!

இதற்கிடையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யாவுக்கு பதிலாக இத்தொடரில் அபிநயா என்கிறவர் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான வதந்திகள் தற்போது ஓய்ந்திருக்கும் சூழலில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடிகை தேஜஸ்வினி நடிக்க இருப்பது போல எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

Vijay TV Bigg Boss Promo – மீண்டும் போட்டிக்களத்தில் கலகலப்பூட்டிய ‘பிக் பாஸ்’ வீடு!

அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் வரப்போகும் சவால்களை முல்லையாக நடிகை தேஜஸ்வினி எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்த சில காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம்பிடித்திருந்தது. இது உண்மையான தகவல் இல்லை என்றாலும் இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. விஜய் டிவியின் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்த நடிகை தேஜஸ்வினி தற்போது ஜீ தமிழ் டிவியின் ‘வித்யா நம்பர் 1’ என்ற புத்தம் புதிய சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!