பாரதி கண்ணம்மா சீரியலின் 2ம் பாகம் இப்படிப்பட்ட ஒரு கதையா – ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்த விஜய் டிவி!
விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வரவுள்ள பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
பாரதி கண்ணம்மா:
ஒருவழியாக விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் அதன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. தற்போது வெண்பாவிற்கும் ரோஹித் உடன் திருமணம் முடிந்து விட அடுத்து சீரியலில் DNA டெஸ்டின் முடிவுகள் பாரதி கைக்கு கிடைக்க உள்ளன. பாரதி வெண்பாவை திருமணம் செய்யும் அளவுக்கு சென்றுவிட்டதால் பிள்ளைகள், மனைவி என அனைவரும் பாரதியை நிராகரிக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
DNA டெஸ்ட் முடிவு தெரியும் பொழுது பாரதிக்கு மயக்கமே வந்துவிடுகிறது. அவருக்கு உலகமே இடிந்து போனது போல ஆகிறது. தனது முட்டாள் தனத்தால் அன்பான குடும்பத்தை இழந்து விட்டோமே என தவிக்கிறார். இதோடு இந்த சீசன் முடிந்து பாரதி கண்ணம்மா இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது. அந்த தொடரில் லட்சுமி, ஹேமா வளர்ந்து அவர்களின் கதை முக்கியமாக காட்டப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் ஆக வளர்ந்த ஹேமா ரோலில் தற்போது கண்ணம்மா ரோலில் நடித்து வரும் வினுஷா நடிக்க உள்ளார். மேலும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் மனநிலை அப்பொழுது எவ்வாறு இருக்கும்.. லட்சுமி ஹேமா மனம் மாறி பாரதியை தன் அம்மாவுடன் சேர்த்து வைப்பார்களா என்பது போன்ற சுவாரசிய கட்டங்களுடன் கதை நகர உள்ளது.