Post Office ல் குடிமக்களுக்கான சிறந்த திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

0
Post Office ல் குடிமக்களுக்கான சிறந்த திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
Post Office ல் குடிமக்களுக்கான சிறந்த திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
Post Office ல் குடிமக்களுக்கான சிறந்த திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் குடிமக்களுக்காக வழங்கப்பட்டு வரும் சிறப்பான நலத்திட்டங்கள் மூலமாக என்னென்ன நன்மைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்தான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post Office

இந்திய அஞ்சல் துறை நாட்டு மக்களுக்காக சில சிறப்பான நலத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. இந்திய அஞ்சல் துறையில் பொது வைப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், 5 வருட தேசிய சேமிப்பு திட்டம் என ஒன்பது வகையான சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. முதலாவதாக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தை பற்றி பார்க்கலாம். இந்த திட்டத்தில் சந்தாதாரர் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரைக்கும் முதலீடு செய்யலாம் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80C இன் முதலீட்டுத் தொகை விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக பெண் குழந்தையின் நலனுக்காக இந்திய அஞ்சல் துறையில் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்னும் திட்டமும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சந்தாதாரர் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்து கொள்ளலாம் மற்றும் 80C வரி விலக்குகளையும் பெற்றுக்கொள்ளலாம். அடுத்ததாக இந்திய அஞ்சல் துறையில் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டமாக தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், பிரிவு 80 CCD (1) இன் கீழ் மூத்த குடிமக்களுக்கு வரிச் சலுகை ஒரு நிதியாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரையிலும் பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ. 50,000 வரைக்கும் கூடுதல் வரிச்சலுகை கிடைக்கும்.

TNPSC குரூப் 2 & 2A முடிவுகள் எப்போது தான் வெளியிடப்படும்? தேர்வர்கள் கவலை!

Exams Daily Mobile App Download

மேலும், தேசிய ஓய்வூதிய அமைப்பு திட்டத்தில் ஓய்வூதிய கார்பஸில் இருந்து வரும் வருமானம் மற்றும் மொத்த தொகைக்கு வரி கிடையாது. தேசிய ஓய்வூதிய அமைப்பு திட்டத்தை போலவே மூத்த குடிமக்கள் சேமிப்புத் (SCSS) திட்டத்தில் சந்தாதாரர் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரை 80C பிரிவின் கீழ் வரி-பயன் கிடைக்கும் எனவும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் வட்டிக்கு வரி விலக்கு இல்லை என்றாலும் கூட 80TTB பிரிவின் கீழ் ரூ. 50,000 வரைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!