TNPSC குரூப் 2 & 2A முடிவுகள் எப்போது தான் வெளியிடப்படும்? தேர்வர்கள் கவலை!

0
TNPSC குரூப் 2 & 2A முடிவுகள் எப்போது தான் வெளியிடப்படும்? தேர்வர்கள் கவலை!
TNPSC குரூப் 2 & 2A முடிவுகள் எப்போது தான் வெளியிடப்படும்? தேர்வர்கள் கவலை!
TNPSC குரூப் 2 & 2A முடிவுகள் எப்போது தான் வெளியிடப்படும்? தேர்வர்கள் கவலை!

தமிழகத்தில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர், வருமான வரித்துறை உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 2, 2A தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குரூப் 2 தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உள்ளிட்ட பணிகளுக்காக குரூப் 2, 2A தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. சுமார் 5529 காலிப்பணியிடங்களை கொண்ட இத்தேர்வுக்கு சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 9.94 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு வினாக்கள் மிக எளிமையாக இருந்தது என்று தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேர்வு முடிவடைந்து 2 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்து வரும் முதன்மை தேர்வை எழுத முடியும். அதனால் நடந்து முடிந்த முதன்மை தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

Jio நிறுவனத்தில் சிறந்த ரீசார்ஜ் பேக் – 90 நாட்களுக்கான புதிய திட்டம்!

Exams Daily Mobile App Download

இதற்கு மத்தியில் குரூப் 2,2A தேர்வின் முதன்மைத் தேர்வு வரும் செப்டம்பர் நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தற்போது முதன்மைத் தேர்வுக்குத் தயாராக போதிய கால அவகாசம் தேவைப்படுவதால் முதல் நிலைத் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதால் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!