பெண் குழந்தைகளுக்கான சிறப்பான டெபாசிட் திட்டம் – ரூ.1000 இருந்தால் போதும்!

0
பெண் குழந்தைகளுக்கான சிறப்பான டெபாசிட் திட்டம் - ரூ.1000 இருந்தால் போதும்!
பெண் குழந்தைகளுக்கான சிறப்பான டெபாசிட் திட்டம் - ரூ.1000 இருந்தால் போதும்!
பெண் குழந்தைகளுக்கான சிறப்பான டெபாசிட் திட்டம் – ரூ.1000 இருந்தால் போதும்!

பெண் குழந்தைகளின் எதிர்கால செலவுக்காக மாதந்தோறும் ரூ. 1000 முதல் சேமிக்கும் படியான அருமையான திட்டத்தை பற்றி மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெபாசிட் திட்டம்:

நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த வகையில், தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்காகவே செல்வமகள் சேமிப்புத் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. அதாவது, பெண் குழந்தைகளின் எதிர்கால செலவுக்காக கல்வி, தொழில், திருமணம் ஆகியவற்றிற்காக 10 வயது பூர்த்தியடைந்த பெண் குழந்தைகளின் பெயரிலேயே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தை துவங்கலாம்.

தமிழகத்தில் நாளை மறுநாள் 500 மருத்துவமனைகள் திறக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

சமீபத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 7.6 சதவீதத்திலிருந்து மத்திய அரசு 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் ரூ.2000 முதல் 2 லட்சம் வரைக்கும் 100 இன் மடங்குகளில் சேமித்துக் கொள்ள இயலும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை டெபாசிட் செய்த தொகைக்கான வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், டெபாசிட் செய்ய ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு பிறகு அதிகபட்சமாக 40% வரைக்கும் தேவையான தொகையை எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

மேலும், டெபாசிட் செய்து வருவோரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நோய்கள் இருப்பின் இதுவரை சேமித்திருக்கும் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்து வரும் காப்பாளர் அல்லது பெற்றோர் இறந்து விட்டாலும் பாதியிலேயே முழு பணத்தையும் சம்பந்தப்பட்டவர் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!