பெல் நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

0
பெல் நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !
பெல் நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !
பெல் நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நவரத்னா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அதன் ஹைதராபாத் யூனிட்டிற்கு வாட்டர் ஃபிரண்ட் சப்போர்ட் இடங்களில் பணியமர்த்துவதற்கு, திட்டப் பொறியாளர்-I ஆக தற்காலிக அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் 27.07.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Project Engineer-I
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பெல் நிறுவன காலிப்பணியிடங்கள்:

Project Engineer-I பதவிக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. Electronics பிரிவில் 21 பணியிடங்களும், Mechanical பதவிக்கு ஒரு பணியிடமும் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Project Engineer-I வயது வரம்பு:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் விதிகளின் படி, 01.07.2022 அன்றைக்குள் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Project Engineer-I கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து B.E / B.Tech / B.Sc Engineering முடித்திருக்க வேண்டும்.

Project Engineer-I சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு ஒப்பந்தத்தின் 1வது, 2வது, 3வது ஆண்டு மற்றும் 4வது ஆண்டுக்கு முறையே ரூ.40,000/-, ரூ.45,000/-, ரூ.50,000/- மற்றும் ரூ.55,000/- என ஒருங்கிணைக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.

Project Engineer-I தேர்வு செயல்முறை:
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு 85 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
  • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் 1:5 என்ற விகிதத்தில் மேற்கூறியவற்றின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

BEL பணிக்கான விண்ணப்ப கட்டணம்:
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.472/- (Rs.400/- + 18% GST)
  • PWD, SC மற்றும் ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
BEL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்து, வாக்-இன் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான தங்கள் விருப்பத்தை தெரிவிக்க, ‘Google படிவங்கள்’ மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!