BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Engineer-I பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான அறிவிப்பில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) Project Engineer-I பணிக்கு என 14 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics & Communication, Electronics & Telecommunication, Communication, Telecommunication, Computer Science, Computer Science Engineer பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 32 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- Project Engineer-I பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
- Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.472/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 1.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.