விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு ரீ என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் பிரியங்கா – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு ரீ என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் பிரியங்கா - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு ரீ என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் பிரியங்கா - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு ரீ என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் பிரியங்கா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த கையோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஆங்கர் பிரியங்கா.

வைரலாகும் புகைபடம்:

விஜய் தொலைக்காட்சியில் அதிகமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சில வாரங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது. மேலும் இந்த சீசன் வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன் ஆவார். இந்த வகையில் இரண்டாவது இடத்தை ஆங்கர் பிரியங்கா பிடித்தார். மேலும் மூன்றாவது இடத்தில் பாவனி இருந்தார்.

ஜீ தமிழ் ‘அன்பே சிவம்’ சீரியல் நடிகை ரக்ஷா திடீர் நீக்கம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சேனல்! இது தான் காரணமா?

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு போட்டியாளர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, ஆங்கர் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மீண்டும் எப்போது வருவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி செட்டில் எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

‘கண்ணான கண்ணே’ சீரியல் நித்யா தாஸ் விலகலுக்கு கர்ப்பம் தான் காரணமா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!

இந்த வகையில் ‘திரும்ப வந்துட்டேனு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் பிரியங்கா. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி செட்டில் இருந்து பின்னணி பாடகி பிரியங்காவுடன், ஆங்கர் பிரியங்கா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்குவார்கள் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here