‘கண்ணான கண்ணே’ சீரியல் நித்யா தாஸ் விலகலுக்கு கர்ப்பம் தான் காரணமா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!

0
'கண்ணான கண்ணே' சீரியல் நித்யா தாஸ் விலகலுக்கு கர்ப்பம் தான் காரணமா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!
'கண்ணான கண்ணே' சீரியல் நித்யா தாஸ் விலகலுக்கு கர்ப்பம் தான் காரணமா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!
‘கண்ணான கண்ணே’ சீரியல் நித்யா தாஸ் விலகலுக்கு கர்ப்பம் தான் காரணமா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!

சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியலில் யமுனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை நித்யா தாஸ் சமீபத்தில் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். இதற்கு கர்ப்பம் தான் காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை நித்யா தாஸ்:

சன் டிவியில் சுமார் 380 எபிசோடுகளை கடந்து பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய ஒரு முக்கியமான சீரியல் ‘கண்ணான கண்ணே’. இந்த தொடர் அப்பாவின் பாசத்தை பெற்றுக்கொள்ள விரும்பும் மகளின் போராட்டத்தை மையமாக கொண்டு காதலும், மோதலும் என இளமை ததும்பும் கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் பாசத்திற்காக எங்கும் மகள் மீராவாக நடிகை நிமிஷிகாவும், அவரிடம் வெறுப்பை காட்டும் அப்பாவாக நடிகர் ப்ரித்வி ராஜும் நடித்து வருகிறார்கள்.

முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என சொன்ன மருத்துவர், உண்மையை மறைக்கும் கதிர் – இன்றைய எபிசோட்!

இவர்களுடன் யுவா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ராகுல் ரவி, ப்ரீத்தியாக அஷ்ரிதா, யமுனாவாக நித்யா தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் தற்போது ப்ரீத்தியின் திருமணத்திற்கு பிறகு வீட்டை இழந்துள்ள குடும்பத்தினருக்கு, மீரா அதனை மீட்டு தர போராடும் கருவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது, ‘கண்ணான கண்ணே’ சீரியலில் மீராவுக்கு சித்தியாக யமுனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை நித்யா தாஸ், சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

குறிப்பாக, யமுனா கதாப்பாத்திரம் நடிகை நித்யா தாஸுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்புகளை பெற்று தந்திருக்கும் நிலையில், இவர் திடீரென சீரியலை விட்டு விலகியது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இவரது சீரியல் விலகலுக்கான காரணம் எதுவும் தெரியாத பட்சத்தில், நடிகை நித்யா தாஸ் கர்ப்பமாக இருப்பது போன்றதான வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இதனால் தான் அவர் சீரியலை விட்டு விலகியதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ள நித்யா தாஸ், தான் கர்ப்பமாக இருப்பது போல வெளியான வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்டதாக கூறி இருக்கிறார்.

திட்டமிட்டு பாரதியை சமாதானம் செய்த வெண்பா, மகளின் நிலைமையை நினைத்து கவலைப்படும் சண்முகம் – இன்றைய எபிசோட்!

அதே நேரத்தில், நித்யா தற்போது சில மலையாள நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் பிசியாக கலந்து கொண்டு வருகிறாராம். அதனால் தமிழ் சீரியலில் நடிக்க அவருக்கு நேரம் இல்லையென்று ‘கண்ணான கண்ணே’ சீரியலில் இருந்து விலகி இருப்பதாக கூறியுள்ளார். மலையாள நடிகையான நித்யா தாஸ், நடிகர் ஷியாமுடன் ‘மனதோடு மழைக்காலம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி இருந்தார். இதனை தொடர்ந்து இதயம், அழகு, காற்றினில் வரும் கீதம், பைரவி உள்ளிட்ட சில சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here