ஜீ தமிழ் ‘அன்பே சிவம்’ சீரியல் நடிகை ரக்ஷா திடீர் நீக்கம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சேனல்! இது தான் காரணமா?

0
ஜீ தமிழ் 'அன்பே சிவம்' சீரியல் நடிகை ரக்ஷா திடீர் நீக்கம் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சேனல்! இது தான் காரணமா?
ஜீ தமிழ் 'அன்பே சிவம்' சீரியல் நடிகை ரக்ஷா திடீர் நீக்கம் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சேனல்! இது தான் காரணமா?
ஜீ தமிழ் ‘அன்பே சிவம்’ சீரியல் நடிகை ரக்ஷா திடீர் நீக்கம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சேனல்! இது தான் காரணமா?

ஜீ தமிழ் டிவியில் ‘அன்பே சிவம்’ சீரியலில் நடித்து வந்த நடிகை ரக்ஷா ஹொல்லா திடீரென சீரியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதற்கு அவர் குண்டாகி இருப்பது தான் காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் ஜீ தமிழ் டிவி சேனல் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறது.

நடிகை ரக்ஷா

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஜீ தமிழ் டிவியில் வெளியாகி மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருக்கும் ஒரு சீரியல் ‘அன்பே சிவம்’. இந்த சீரியல் கணவனால் கைவிடப்பட்டு, 2 குழந்தைகளை வைத்து வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கும் ஒரு பெண் தனக்கானவரை தேடி, அவருடன் எப்படி இணைகிறார் என்பதை கருவாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘அன்பே சிவம்’ சீரியலில் 2 குழந்தைகளுக்கு தாயாக அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரக்ஷா ஹொல்லா.

‘கண்ணான கண்ணே’ சீரியல் நித்யா தாஸ் விலகலுக்கு கர்ப்பம் தான் காரணமா? அவரே அளித்த விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மூலம் கன்னட திரையில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை ரக்ஷா ஹொல்லா சிறிய இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் டிவியில் நடித்து வந்தார். இந்நிலையில் ‘அன்பே சிவம்’ சீரியலில் அன்பாக சுமார் 100 எபிசோடுகள் வரை நடித்து வந்த நடிகை ரக்ஷா ஹொல்லா தீடீரென இந்த சீரியலை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார். இதற்கு காரணம் நடிகை ரக்ஷா ஹொல்லா குண்டாக இருப்பது தான் என்று சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இந்த தகவல் தற்போது நடிகை ரக்ஷா ஹொல்லா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகைகள் குண்டாக இருந்தால் அவர்களை சீரியலில் இருந்து விலக்கி விடுவீர்களா, ‘அன்பே சிவம்’ சீரியலில் நடிகை ரக்ஷா, 2 குழந்தைக்கு தாயாக தானே நடிக்கிறார், அதனால் அவர் பருமனாக இருந்தால் என்ன, இதுவே ஒரு நடிகர் குண்டாக இருந்தால் அவரை சீரியலில் இருந்து நீக்கி விடுவீர்களா என்று நடிகை ரக்ஷா ஹொல்லாவுக்கு ஆதரவாக டிவி சேனல் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என சொன்ன மருத்துவர், உண்மையை மறைக்கும் கதிர் – இன்றைய எபிசோட்!

இதற்கு முன்னதாக ஜீ தமிழ் டிவியின் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ சீசன் 4 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் விதத்தில் காட்டப்பட்ட சில காட்சிகளை எச்சரித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஜீ தமிழ் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகை குண்டாக இருப்பதால் அவரை சீரியலில் இருந்து விலக்கி இருக்கும் ஜீ தமிழ் டிவி மீண்டும் சர்ச்சைக்குள் சிக்க, சேனலுக்கு எதிர்ப்புகள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here