ஜானகி ராமனை காணாமல் தேடும் கண்ணம்மா, உண்மையை ராமனிடம் சொன்ன ஜானகி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஜானகி ராமனை காணாமல் தேடும் கண்ணம்மா, உண்மையை ராமனிடம் சொன்ன ஜானகி - இன்றைய
ஜானகி ராமனை காணாமல் தேடும் கண்ணம்மா, உண்மையை ராமனிடம் சொன்ன ஜானகி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஜானகி ராமனை காணாமல் தேடும் கண்ணம்மா, உண்மையை ராமனிடம் சொன்ன ஜானகி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஜானகி ராமன் ஜோடியை காணவில்லை என்பதால் பாரதி கண்ணம்மாவை திட்டுகிறார். பின் ஜானகி தன்னுடைய உடல்நிலை பற்றி ராமனிடம் பக்குவமாக சொல்லி புரிய வைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஜானகி அம்மா மற்றும் ராமன் ஐயாவை காணாமல் கண்ணம்மா மற்றும் மருத்துவமனையில் இருப்பவர்கள் எல்லா பக்கமும் தேடுகின்றனர். பின் பாரதி வர அவரிடம் கண்ணம்மா வாக்கிங் போவதாக கேட்டார்கள் என சொல்ல பாரதி வாக்கிங் போக வேண்டும் என்றால் என்னிடம் தான் கேட்க வேண்டும் என பாரதி சொல்கிறார். பின் கண்ணம்மாவை சரியாக வேலை செய்யாமல் தனக்கு தான் எல்லாம் தெரியும் என முடிவு எடுப்பது என சொல்லி சத்தம் போடுகிறார்.

அப்போது விக்ரம் வர அவரிடம் ஜானகி அம்மா ராமன் ஐயாவை காணவில்லை என சொல்கிறார். அப்போது விக்ரம் எங்கே போனார்கள் என கேட்க பாரதி இவங்க தான் வெளியே போக அனுமதி கொடுத்து இருப்பதாக சொல்கிறார். பின் வாட்ச் மேனை கூப்பிட்டு கேட்க அவர் நான் பார்க்கவில்லை என சொல்கிறார். அப்போது ஒரு வயதான ஜோடி தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்கள் யார் என தெரியவில்லை என சொல்கிறார்கள். அனைவரும் அந்த செய்தியை பார்த்து பதட்டம் அடைகின்றனர். விக்ரம் அப்படி எல்லாம் இருக்காது என நம்பிக்கையுடன் இருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் ஜானகி அம்மாவும் ராமன் சாரும் கடைக்கு வந்து ஜிலேபி வாங்கி சாப்பிடுகின்றனர். அப்போது ராமன் ஐயா எனக்கு சுகர் இருப்பதாக சொல்ல அதெல்லாம் மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் என்ன விசேஷம் என கேட்க உங்களிடம் சந்தோஷமான விஷயம் பேச வேண்டும் என சொல்கிறார். அப்போது ஜானகி அம்மா 2 வருஷம் கழித்து என்ன செய்வீர்கள் என கேட்க உன்னுடன் தான் இதே போல இருப்பேன் என சொல்கிறார். பின் 10 வருஷம் கழித்து என்ன செய்வீர்கள் என கேட்க, அதுவரை நான் இருப்பேனா என தெரியவில்லை என சொல்கிறார்.

கடவுள் தான் நான் இருக்க வேண்டுமா என முடிவு செய்வார் என சொல்ல உடனே ஜானகி அம்மா ஆமாம் பிறப்பு இறப்பு எல்லாம் கடவுள் கையில் தான் இருக்கிறது என சொல்கிறார். இப்போது ஏன் இதை பேசுகிறாய் என கேட்க என் உடம்பு சரி இல்லாமல் இருக்கிறது என சொல்கிறார். அப்போது ராமன் பாரதி டாக்டர் தான் உனக்கு எதுவும் இல்லை என சொன்னதாக சொல்கிறார். அதை நான் தான் சொல்ல சொன்னேன் என ஜானகி அம்மா சொல்ல ராமன் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

என் இதயத்தில் பிரச்சனை இருக்கிறது ஆப்ரேசன் செய்ய வேண்டும் என பாரதி சொல்லி இருக்கிறார். ஆனால் என் உடம்பு மோசமாக இருப்பதால் ஆப்ரேசன் செய்தாலும் அது என் உயிரை காப்பாற்றும் என தெரியாது என சொல்கிறார். பின் ராமன் அதை எல்லாம் கேட்டு அழ, எல்லாரும் ஒரு நாள் இறக்க தான் வேண்டும் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா நமக்கு திருமணம் ஆன புதிதில் வளர்த்த நாய் இறந்துவிட்டது அப்போது நான் சாப்பிடாமல் அழுதேன் நீங்க தான் தைரியம் சொன்னீர்கள்.

மாநிலத்தில் நாளை மஞ்சள் அலர்ட் – முதலமைச்சர் அறிவிப்பு!

இப்போது எனக்கு என்ன ஆனாலும் நீங்க தான் தைரியம் சொல்ல வேண்டும் என சொல்கிறார். உடனே ராமன் சரி என சமாதானம் ஆகிறார். மறுபக்கம் கண்ணம்மா அவர்களை காணாமல் பதட்டமாக இருக்க விக்ரம் அவர்கள் வந்துவிடுவார்கள் என சொல்கிறார். கண்ணம்மா எல்லாம் என்னால் தான் என சொல்லி பதட்டமாக இருக்க பாரதி வந்து இன்னும் அவர்களை காணவில்லை போலீசில் புகார் கொடுக்கலாம் என சொல்ல ஆனால் விக்ரம் ஏன் என கேட்கிறார். பாரதி செய்திகளில் தற்கொலை என வருகிறது. நம்ம மருத்துவமனையில் இருவரை காணவில்லை என்பதால் புகார் கொடுக்க வேண்டும் என சொல்கிறார்.

அப்போது நர்ஸ் வந்து ஜானகி அம்மா ராமன் சார் வருவதாக சொல்கிறார். ஜானகி அம்மாவிடம் எங்கே போனீங்க என கேட்க கொஞ்சம் வெளியே போக வேண்டும் என நான் தான் இவரை அழைத்து சென்றேன். என்னை மன்னித்து விடுங்கள் என சொல்ல நர்ஸ் உங்களால் கண்ணம்மா தான் திட்டுவாங்கியதாக சொல்கிறார். கண்ணம்மா மீது தவறு இல்லை என் மீது தான் தவறு என சொல்ல, விக்ரம் சார் ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறார் என கேட்கிறார். அப்போது ஜானகி அம்மா இவரிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன் என சொல்கிறார். அதை கேட்டு பாரதி விக்ரம் கண்ணம்மா என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!