புதிய கண்ணம்மாவை கொஞ்சிய லட்சுமி – வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மாவில் புதிய கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷா தேவி மற்றும் அந்த சீரியலில் அவருக்கு மகளாக லட்சுமி கேரக்டரில் நடித்து வரும் ரக்ஷாவும் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர்.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா வில் தற்போது 8 வருடங்களுக்கு பிறகு கண்ணம்மாவிற்கு தனக்கு இரண்டு குழந்தை உள்ளது தெரிய வந்துள்ளது. இரண்டாவது குழந்தை பாரதியிடம் வளரும் ஹேமா தான் என்று தெரிய வந்ததும். எப்படியாவது ஹேமாவை எப்படியாவது தன்னிடம் கொண்டு வர வேண்டும் என்று கண்ணம்மா முயற்சித்து வருகிறார். தன்னிடம் இருந்து தனது குழந்தையை பிரித்து விடுவாள் என்று பயந்து பாரதி கண்ணம்மாவை விட்டு மொத்தமாக பிரிய முடிவெடுத்து கண்ணம்மாவிற்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார்.
இந்த வாரம் வெளியேற போகும் பிக் பாஸ் போட்டியாளர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இதற்கிடையில் வில்லி வெண்பா நான் சிறையில் இருப்பதற்கு கண்ணம்மா தான் காரணம் என்றார் பாரதியின் கோபத்தை அதிகப்படுத்தும் விடுகிறார். சீரியலில் அடுத்த திருப்பங்கள் நடைபெற்றிரும் இந்த நிலையில் கண்ணமாக நடித்த நடிகை ரோஷினி சீரியலில் இருந்து விலகியுள்ளார். எதிர்பாராத காரணங்களால் விலக நேர்ந்ததாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். இவருக்கு பதிலாக தோற்றத்தில் ஓரளவு இவரை போலவே உள்ள டிக்டாக் பிரபலம் வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.
கோலாகலமாக நடைபெற்ற சித்து & ஷ்ரேயாவின் சங்கீத் பங்ஷன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!!
இவர் மாடலாகவும், டிக் டாக் வீடியோக்கள் மூலமாகவும் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்துள்ளார். அண்மையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பாரதி கண்ணம்மா தொடரின் இயக்குனருடன் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டார். தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது பாரதி கண்ணம்மா வில் கண்ணம்மாவுக்கு மகளாக லட்சுமி கேரக்டரில் நடித்து வரும் ராக்ஷா பாப்பாவுடன் ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.