கோலாகலமாக நடைபெற்ற சித்து & ஷ்ரேயாவின் சங்கீத் பங்ஷன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!!

0
கோலாகலமாக நடைபெற்ற சித்து & ஷ்ரேயாவின் சங்கீத் பங்ஷன் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!!
கோலாகலமாக நடைபெற்ற சித்து & ஷ்ரேயாவின் சங்கீத் பங்ஷன் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!!
கோலாகலமாக நடைபெற்ற சித்து & ஷ்ரேயாவின் சங்கீத் பங்ஷன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!!

தமிழ் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வந்த நடிகர் சித்து மற்றும் ஷ்ரேயா இருவரின் திருமண வைபவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் நடிகர் திரவியம் தனது குடும்பத்தினருடன் பங்கு பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

சித்து & ஷ்ரேயா

தமிழ் சின்னத்துறையில் பிரபலம் அடைந்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு என்று மக்கள் மத்தியில் தனி இடம் இருக்கிறது. அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலின் முலமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்கள் தான் நடிகர் சித்து மற்றும் நடிகை ஷ்ரேயா. இருவருக்குமே இந்த சீரியல் முதல் அனுபவம் என்று தான் கூற வேண்டும். ஆனால், இருவருமே தங்களது நடிப்பின் காரணமாக தங்களுக்கு என்று தனி ரசிகர் படையினை உருவாக்கி கொண்டனர். அது மட்டுமின்றி சீரியலில் நடிக்கும் போது இருவரும் காதலித்தனர்.

Vijay Tv Big Boss Promo | இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கு சண்டை மூட்டி விட்ட கமல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அவர்களது காதலை சமீப நாட்களுக்கு முன்பாக தான் அனைவருக்கும் தெரியப்படுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சின்னத்துறை நட்சத்திரங்களான ஆரியன் & ஷபானா மற்றும் மதன் & ரேஷ்மா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் சித்து மற்றும் ஷ்ரேயா இருவரும் அந்த திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக பலரும் பேட்டி எடுக்கும் போது இவர்களது திருமணம் குறித்து கேட்டிருந்தனர். இருவருமே வெகு விரைவில் தங்களது திருமணம் இருக்கும் என்று கூறி வந்த நிலையில், தற்போது இருவரது திருமண வைபவங்களும் நடைபெற்று வருகிறது.

300 எபிசோடுகளை கடந்து வெற்றி படைக்கும் சன்டிவியில் ‘திருமகள்’ சீரியல் – லைவில் நன்றி தெரிவித்த ஹீரோ!

அதற்கு முதல் கட்டமாக, சங்கீத் விழா நடைபெற்றுள்ளது. அதில் நடிகர் திரவியம் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். திருமண விழாவில் அவர் சமைத்து அனைவர்க்கும் கொடுப்பது போல இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சங்கீத் விழா முடிந்துள்ள நிலையில் விரைவில் சித்து மற்றும் ஷ்ரேயா திருமணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரசிகர்கள் அதனை காண ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!