சாந்தியை பார்க்க வரும் மாயன், லட்சுமியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
சாந்தியை பார்க்க வரும் மாயன், லட்சுமியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய
சாந்தியை பார்க்க வரும் மாயன், லட்சுமியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
சாந்தியை பார்க்க வரும் மாயன், லட்சுமியை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.பின் வெண்பா அனுப்பிய ஆள் என சொல்லி சாந்தியை பார்க்க ஒருவர் வருகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், அகில் சௌந்தர்யா பேசிக் கொண்டிருக்கும் போது டிவியில் செய்தி ஒன்று வருகிறது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட வெண்பா 15 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை வெண்பா மருத்துவ தொழில் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து சௌந்தர்யா இவ்வளவு மோசமான பெண்ணாக இருக்கிறாளே என பேசிக் கொள்கின்றனர்.

‘தென்றல் வந்து என்னை தொடும்’ & ‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியல்கள் மஹாசங்கமம் – நவம்பர் 15 முதல் ஒளிபரப்பு!

வெண்பா வீட்டில் சாந்தி அமர்ந்து வெண்பாவை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். வீட்டில் ஒரு நாள் கூட ஏசி இல்லாமல் இருக்கமாட்டிங்க இப்போ எப்படி இருக்கீங்க என புலம்ப அந்த நேரம் பார்த்து ஒருவர் அங்கே வர சாந்தி திருடன் என நினைத்து அடிக்கிறார். ஆனால் அவர் வெண்பா உடன் சிறையில் இருந்ததாகவும் நான் கண்ணம்மாவின் தாய் மாமா தான் அதனால் கண்ணம்மாவை பழி வாங்க நான் உதவி செய்வேன் என சொல்கிறார். இத்தனை நாள் நான் ஜெயிலில் கஷ்டப்பட்டதற்கு காரணம் கண்ணம்மா தான் என சொல்கிறார்.

எல்லாத்துக்கும் காரணம் அந்த டாக்டர் தான் என மாயன் சொல்ல சாந்தி வெண்பாவும் டாக்டரும் காதலிக்கிறார்கள் என சொல்கிறார். மறுபக்கம் கண்ணம்மா இவர் விவாகரத்து வாங்கினால் ஹேமாவை பிரிய வேண்டி வருமே, வக்கில் 8 வருடம் பிரிந்து இருந்தால் விவகாரத்து கிடைத்துவிடும் என சொல்கிறார் எதற்கு இப்படி நடந்து கொள்கிறார் என நினைக்க, லட்சுமி தூக்கத்தில் அப்பா அப்பா என கத்துகிறார். கண்ணம்மா அவரை எழுப்பி என்ன நடந்தது என கேட்க, கனவில் அப்பா என்னை பார்க்க வந்தார் எனக்கு பொம்மை சாக்லேட் எல்லாம் வாங்கிட்டு வந்தார்.

கோவை மாவட்டத்தில் நாளை (நவ.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

என்னை லட்சுமி என கூப்பிட்டார் ஆனால் முகத்தை பார்ப்பதற்குள் சென்றுவிட்டார். கனவில் கூட முழுமையாக வராமல் இருக்கிறார் என சொல்ல, ஒரு நாள் உன் அப்பா வருவாங்க உனக்கு முத்தம் கொடுப்பார் என கண்ணம்மா சொல்கிறார். இப்படி தான் நிறைய தடவை சொல்கிறாய் என லட்சுமி கேட்கிறார். அடுத்து பாரதி அந்த பக்கம் வர அகில் பாரதி இனிமேல் கொஞ்சம் ஒழுங்காக இருப்பான் அவளை குழப்பி விட வெண்பா இல்லை என பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பின் பாரதி அங்கே வர உன் தோழி நிலைமை என்ன தெரியுமா என கேட்கிறார். இனிமேல் அவர் வெளியே வரவே முடியாது என சொல்ல, வெண்பா ரொம்ப நல்லவள் அவள் அப்படி எதுவும் செய்திருக்கமாட்டாள் எல்லாத்துக்கும் காரணம் எல்லாரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடும் கண்ணம்மா தான் என சொல்கிறார். வெண்பா எந்த தப்பும் செய்யத்தவள் அவளை பெரிய வக்கீல் வைத்து நான் ஜாமீன் எடுப்பேன் என சொல்லி கிளம்புகிறார்.

மீனாவை ஐஸ் வைக்கும் ஐஸ்வர்யா, கலாய்க்கும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கலாட்டா!

சௌந்தர்யா பாரதியிடம் நீ வெண்பாவிற்கு உதவி செய்தால் நான் கண்ணம்மாவிற்கு உதவி செய்வேன் என சொல்கிறார். எனக்கு நீங்க சத்தியம் செய்து கொடுத்திருக்கீங்க என கேட்க, ஆமாம் நீ வெண்பாவிற்கு எந்த உதவியும் செய்ய கூடாது அப்படி செய்தால் நான் கண்ணம்மாவிற்கு எல்லா உதவியும் செய்வேன் சத்தியத்தை மீறுவேன் என சொல்கிறார். பாரதி அதிர்ச்சி அடைந்து உள்ளே செல்ல,சௌந்தர்யா செய்தது சரி என வேணு சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here