பாரதி தான் அப்பா என தெரிந்து கொண்ட லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!

0
பாரதி தான் அப்பா என தெரிந்து கொண்ட லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா -
பாரதி தான் அப்பா என தெரிந்து கொண்ட லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா - "பாரதி கண்ணம்மா" இன்றைய எபிசோட்!
பாரதி தான் அப்பா என தெரிந்து கொண்ட லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்க துணிகளுக்கு இடையே பாரதி பெயர் பலகையை எடுக்கிறார். பின் லட்சுமிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிந்ததை நினைத்து வருத்தப்படுகிறார். சௌந்தர்யாவிற்கு போன் செய்து விவரத்தை சொல்ல சௌந்தர்யா லக்ஷ்மியை அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வீட்டில் துணிகள் எல்லாம் அப்படியே கிடைக்க அதை எல்லாம் எடுத்து வைக்கிறார். அப்போது துணிகளுக்கு இடையே பாரதியின் பெயர் பலகை இருக்கிறது. கண்ணம்மா அதை எடுத்து பார்த்து இது எப்படி இங்கே வந்தது என நினைக்கிறார். லட்சுமி தான் கொண்டு வந்திருப்பாள் இதை ஏன் இங்கே வைத்திருக்கிறாள் என தெரியாமல் கண்ணம்மா குழப்பத்தில் இருக்கிறார். அப்போது மேலே ஐ லவ் யூ அப்பா என எழுதி இருப்பதை பார்த்து கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். அப்போ லக்ஷ்மிக்கு அவர் தான் அப்பா என்ற உண்மை தெரிந்துவிட்டது என நினைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் மீண்டும் தேட அங்கே ஒரு பேப்பர் இருக்கிறது. அதில் கண்ணம்மா பாரதி ஹேமா பள்ளி சுற்றுலா போனது பற்றி லட்சுமி எழுதி இருக்கிறாள். அப்பா உடன் இருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால் அப்பா ஏன் எங்களை விட்டு சென்றார் என லட்சுமி எழுதி இருக்கிறார். பின் ஒரு நோட்டில் அம்மாவின் ஆதார் கார்டு வைத்து அப்பாவை தேடி சென்றேன் அப்போது தான் எனக்கு அப்பா யார் என்ற உண்மை தெரிந்தது. ஆனால் அப்பாவிற்கு ஏன் எங்களை பிடிக்கவில்லை என தெரியவில்லை என எழுதி இருக்கிறார். பின் தாத்தா பாட்டி என உறவு முறை பெயர்களையும் எழுதி இருக்கிறார்.

சமூக வலைதள பக்கத்தில் ஸ்ரீநிதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் – சீரியலை விட்டு செல்ல முடிவு!

அதை பார்த்து கண்ணம்மா மனம் உடைந்து போகிறார். லட்சுமியை இனிமேல் எப்படி பார்ப்பேன் என கண்ணம்மா வருத்தப்படுகிறார். பின் கண்ணம்மா சௌந்தர்யாவிற்கு போன் செய்கிறார். என்ன கண்ணம்மா இந்த நேரத்தில் வீடியோ காலில் வருகிறாள் என தெரியாமல் சௌந்தர்யா அட்டென்ட் செய்ய கண்ணம்மா சக்திக்கு ஆப்ரேசன் செய்து களைத்து போய் இருப்பாய் என சொல்ல அதை விட பெரிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது என கண்ணம்மா சொல்கிறார். அப்போது கண்ணம்மா பெயர் பலகையை காட்ட சௌந்தர்யா அது அங்கே எப்படி வந்தது என கேட்கிறார்.

பின் மேலே எழுதி இருப்பதை பாருங்கள் என சொல்ல அதில் ஐ லவ் யூ அப்பா என இருக்கிறது. சௌந்தர்யா அதை பார்த்து அதிர்ச்சி அடைய இதை வைத்து கண்ணம்மா நீ முடிவு செய்யாதே என சௌந்தர்யா சொல்கிறார். ஆனால் கண்ணம்மா இதை விட நிறைய இருக்கிறது. இந்த நோட்டில் எல்லா விவரமும் எழுதி வைத்திருப்பதாக சொல்கிறார். அவளுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது நான் இனிமேல் அவளை எப்படி பார்ப்பேன் என கண்ணம்மா கேட்க , நான் லட்சுமி உடன் வருகிறேன் அங்கே எல்லாம் பேசலாம் என சௌந்தர்யா சொல்கிறார்.

சௌந்தர்யா வேணு கண்ணம்மா சொன்னதை நினைத்து அதிர்ச்சி அடைய கண்ணம்மா இங்கே வந்து பாரதியிடம் பேசிய நாளில் எடுத்த சிசிடிவி பதிவுகளை பார்க்கிறார். அப்போது அதில் லட்சுமி வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இனிமேல் என்ன செய்வது என தெரியாமல் சௌந்தர்யா இருக்க அகில் வந்து என்ன ஆனது என கேட்கிறார் அப்போது சௌந்தர்யா லக்ஷ்மிக்கு உண்மை தெரிந்ததை சொல்கிறார். பின் லட்சுமி ஹேமா விளையாடி கொண்டிருக்க அப்போது சௌந்தர்யா வேணு லக்ஷ்மியை கொஞ்சுகின்றனர். லக்ஷ்மிக்கு எதுவும் புரியாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!