ரோஹித்தை திருமணம் செய்ய விருப்பமில்லை என சொல்லும் வெண்பா, பாரதி சொன்ன அதிர்ச்சி தகவல் – இன்றைய எபிசோட்!

0
ரோஹித்தை திருமணம் செய்ய விருப்பமில்லை என சொல்லும் வெண்பா, பாரதி சொன்ன அதிர்ச்சி தகவல் - இன்றைய எபிசோட்!
ரோஹித்தை திருமணம் செய்ய விருப்பமில்லை என சொல்லும் வெண்பா, பாரதி சொன்ன அதிர்ச்சி தகவல் - இன்றைய எபிசோட்!
ரோஹித்தை திருமணம் செய்ய விருப்பமில்லை என சொல்லும் வெண்பா, பாரதி சொன்ன அதிர்ச்சி தகவல் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ரோஹித் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு கண்ணம்மாவிற்கும் சௌந்தர்யா குடும்பத்திற்கும் நன்றி சொல்கிறார். பின் வெண்பா எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என எல்லார் முன்னாடியும் சொல்கிறார். நான் ஒருவரை காதலிப்பதாக சொல்ல, அது பாரதி தான் என சொல்கிறார். பின் பாரதி என்ன நினைக்கிறார் என ரோஹித் கேள்வி கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் ரோஹித் நன்றியை சொல்கிறார். கண்ணம்மாவை பார்த்து அக்கா நீங்க நான் சொன்னதற்காக வந்ததற்கு நன்றி என சொல்ல, பின் டாக்டர் பாரதி அவருக்கு பின்னால் இருப்பது யார் என ஷர்மிளாவிடம் கேட்கிறார். அது பாரதியின் அம்மா சௌந்தர்யா என சொல்ல, பாரதியின் அம்மாவா இந்த டாக்டரை பெற்றது நீங்க தான செம அழகாக இருக்கீங்க என சொல்கிறார். பின் வேணுவை காட்டி இது பாரதியின் அப்பா என சொல்ல அங்கிள் நீங்களும் செம அழகாக இருக்கீங்க என சொல்கிறார்.

பின் அகிலை பார்த்து அவர் வந்ததற்கும் மிகவும் சந்தோசம் என சொல்கிறார். பின் அனைவரும் வந்ததற்கு நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் என ரோஹித் சொல்ல வெண்பாவை பேச சொல்கிறார். வெண்பா பேசாமல் இருக்க ஷர்மிளாவும் ரோஹித் பேச சொல்கிறார். கண்ணம்மாவும் வெண்பாவை பேச சொல்லி சொல்கிறார். அப்போது வெண்பா அம்மா இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு எல்லாரும் வந்ததற்கு மிகவும் நன்றி என சொல்கிறார். அம்மா எதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் என எனக்கு தெரியாது

TN Job “FB  Group” Join Now

ஆனால் இங்கே வந்திருக்கும் பலருக்கு இது என்ன நிகழ்ச்சி என தெரிந்திருக்கிறது என சொல்கிறார். ரோஹித்தை மாப்பிள்ளை என சொன்னதும் செம சந்தோசமாக இருக்கிறார்கள். கண்ணம்மா சூப்பர் என சொல்ல வெண்பா இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் என சொல்ல, நான் என் மனதில் இருப்பதை சொல்ல போகிறேன் என சொல்கிறார். என் அம்மா திருமண ஏற்பாடுகளை செய்திருக்கலாம். மாப்பிள்ளைக்கு கூட என்னை பிடித்திருக்கலாம் ஆனால் எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என சொல்கிறார்.

எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என சொல்ல இந்த ரோஹித்தை எனக்கு பிடிக்கவில்லை என வெண்பா சொல்கிறார். இத்தனை பேருக்கு முன்னால் என்னை அசிங்கப்படுத்துகிறாய் என வெண்பாவை ஷர்மிளா கேட்கிறார். அப்போது ரோஹித் மைக்கை வாங்கி வெண்பா அவருடைய முடிவை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது என சொல்கிறார். பின் ஷர்மிளா ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல் என சொல்ல ஏன் என்றால் நான் வேறு ஒருவனை காதலிக்கிறேன் அவனுக்காக தான் நான் காத்துக் கொண்டிருக்கின்றேன் என சொல்கிறார்.

வெண்பா பேசுவதை கேட்டு அகில் பதட்டம் அடைய சௌந்தர்யா அமைதியாக இருக்க சொல்கிறார். ஷர்மிளா இதுக்கு மேலே பேசாதே என சொல்ல ரோஹித் அமைதியாக இருக்க சொல்கிறார். அப்போது ரோஹித் இங்கே நடப்பதெல்லாம் வைத்து உங்க சந்தோசம் எல்லாம் போக கூடாது என சொல்கிறார். இது என்னுடைய எதிர்க்காலம் என சொல்லிவிட்டு வெண்பாவிடம் உங்க மனதில் வேற ஒருவர் இருப்பதாக சொல்லி இருக்கீங்க அவருக்காக தான் காத்திருப்பதாக சொல்கிறீர்கள் அவர் யார் என நான் தெரிந்து கொள்ள வேண்டும் என ரோஹித் சொல்கிறார்.

வங்கி செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு – 5 நாட்கள் விடுமுறை! முழு விவரம் இதோ!

அவரும் உங்களை காதலித்தால் இந்த இடத்தில் உங்க கல்யாண பேச்சை பேசலாம் என சொல்கிறார். அகில் அதை கேட்டு கோபப்படுகிறார். பின் நீ காதலிக்கும் அந்த மாப்பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக நான் நினைக்கிறேன் பேசியதை எல்லாம் கேட்டு இருப்பார் போல என நினைக்கிறார். யார் அது என கேட்க சரி நானே சொல்கிறேன் என சொல்லி டாக்டர் பாரதி என சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் பதட்டம் அடைகின்றனர். பின் வெண்பாவிடம் உண்மையா என கேட்க ஆமாம் ஆமாம் நான் பாரதியை தான் காதலிக்கிறேன் என வெண்பா சொல்கிறார்.

பின் அனைவரும் கிளம்ப ரோஹித் எல்லாரையும் அமர சொல்கிறார். ரோஹித் வெண்பா நீ பாரதியை காதலிக்கிறீர்கள் ஆனால் பாரதி உன்னை காதலிக்கிறாரா என்பதை கேட்டுவிடுவோம் என சொல்கிறார். பாரதியை கூப்பிட்டு நீங்க வெண்பாவை காதலிக்கிறீர்களா என கேட்கிறார். எல்லாரும் பாரதி கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என சொல்கின்றனர். பாரதி நான் கண்டிப்பாக சொல்கிறேன் என சொல்கிறார். அவர் என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்துக் கொண்டிருக்க பாரதி கண்ணம்மாவை வெறுப்பேத்த வெண்பாவை காதலிப்பதாக சொன்னால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என நினைக்கிறார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!