வங்கி செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு – 5 நாட்கள் விடுமுறை! முழு விவரம் இதோ!

0
வங்கி செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு - 5 நாட்கள் விடுமுறை! முழு விவரம் இதோ!
வங்கி செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு - 5 நாட்கள் விடுமுறை! முழு விவரம் இதோ!

வங்கி செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு – 5 நாட்கள் விடுமுறை! முழு விவரம் இதோ!

இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்குமான வழிமுறைகளையும் வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்களில் மாநில வாரியாக பரிந்துரைக்கப்பட்ட நாட்களும், பண்டிகை கால விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.

மேலும் இதில் பண்டிகை கால விடுமுறை தினத்தில் அந்த பண்டிகை நடைபெறும் பகுதிகளில் இயங்கும் வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் வார விடுமுறை நாட்கள் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். அதாவது இரண்டாவது சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அளிக்கப்படும் விடுமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அளிக்கப்படுகிறது. அதன்படி இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலில் ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படுள்ளது. இதில் இன்னும் இந்த மாதத்தில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

ஆனால் இதில் தமிழகத்தில் வார விடுமுறை மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்ற பொது விடுமுறை நாட்கள் தமிழகத்தில் உள்ள வங்கிகளை பாதிக்காது. அதனால் வங்கி சேவைகளில் அதிகமான பாதிப்பு எதுவும் இருக்காது. ஆனால் இந்த வங்கி விடுமுறை தினத்தை வாடிக்கையாளர்கள் கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் இதன் மூலமாக வீணாக வங்கிகளுக்கு சென்று ஏமாறுவதை தவிர்க்கலாம். இதையடுத்து இந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்த விவரங்கள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை நாட்கள்:
  • 19.06.2022 – ஞாயிற்றுக்கிழமை (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
  • 22.06.2022 – கர்ச்சி பூஜை – திரிபுரா மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
  • 25.06.2022 – நான்காவது சனிக்கிழமை (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
  • 26.06.2022 – ஞாயிற்றுக்கிழமை (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
  • 30.06.2022 – ராம்னா நீ – மிசோரம் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!