கண்ணம்மாவிற்கு போன் செய்து வருத்தப்பட்ட ஹேமா, வெண்பாவிற்கு கண்டிஷன் போட்ட ஷர்மிளா – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவிற்கு போன் செய்து வருத்தப்பட்ட ஹேமா, வெண்பாவிற்கு கண்டிஷன் போட்ட ஷர்மிளா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவிற்கு போன் செய்து வருத்தப்பட்ட ஹேமா, வெண்பாவிற்கு கண்டிஷன் போட்ட ஷர்மிளா - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவிற்கு போன் செய்து வருத்தப்பட்ட ஹேமா, வெண்பாவிற்கு கண்டிஷன் போட்ட ஷர்மிளா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா வேலை விட்டு வர லட்சுமி அம்மா நல்ல வேலைக்கு போனதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் ஹேமா போன் செய்து இனிமேல் ஸ்கூலிற்கு கண்ணம்மா வராததை சொல்லி வருத்தப்படுகிறார். மறுபக்கம் வெண்பாவை வெளியே கொண்டு வர கண்டிசன்களை ஒப்புக் கொள்ள ஷர்மிளா சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வேலை விட்டு வர லட்சுமி படித்துக் கொண்டிருக்கிறாள். அம்மாவை பார்த்ததும் சந்தோசப்பட பரவாயில்லையே வீட்டிலேயே இருக்கிறாய் என கண்ணம்மா சொல்கிறார். பின் லட்சுமி வடிவு ஆன்டி இவ்வளவு நேரம் இங்கே இருந்தார் எனக்கு படிக்க சொல்லி கொடுத்ததாக சொல்கிறார். அப்பறம் கண்ணம்மாவை பார்த்து நீ இந்த சேலையில் மிகவும் அழகாக இருக்கிறாய் என லட்சுமி சொல்ல இது தான் என்னுடைய யூனிபாம் என சொல்கிறார். இப்போது நீ என்ன வேலை பார்க்கிறாய் என கேட்க நான் பெரிய மருத்துவமனையை நிர்வாகம் செய்கிறேன் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போ என் அம்மா ஆபிசர் ஆகி இருக்கிறாய் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது என் ஸ்கூலில் இனிமேல் பெருமையாக சொல்வேன் என சொல்கிறார். அப்போது நீ சாப்பிட்டியா என கேட்க அப்போது நான் சாப்பிட்டேன் ஆனால் ஹேமா தான் நீ வராததை நினைத்து வருத்தப்பட்டதாக சொல்கிறார். அப்போது ஹேமா போன் செய்ய இனிமேல் வரமாடீங்களா சமையல் அம்மா அப்போ என்னால் உங்களை பார்க்கவே முடியாதா என சொல்லி அழுகிறார். அப்போது கண்ணம்மா நான் ஒரு நாள் உன்னை பார்க்க வருகிறேன் நீ நல்லா சாப்பிட்டு படிக்க வேண்டும் என சொல்கிறார்.

பின் ஹேமா சரி என சொல்கிறார். மறுபக்கம் பாரதி மருத்துவமனைக்கு வர அப்போது விக்ரம் வருகிறார். பாரதி சாப்பிட்டாரா என கேட்க இல்லை என சொல்கிறார். அப்போது ஒரு நல்ல இடத்தில் சாப்பிடலாம் என சொல்லி விக்ரம் அழைத்து செல்ல கேண்டினில் நல்ல சாப்பாடுகள் கிடைக்கிறது. அப்போது பாரதி எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டு நன்றாக இருப்பதாக சொல்ல எல்லாம் நாம எஓ ஐடியா தான் என கண்ணம்மாவை அழைத்து விக்ரம் சொல்கிறார். அதனால் பாரதிக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. பின் என்ன சமையல் அம்மா விற்காத மாவை இங்கே விற்றுவிட்டயா என கேட்க இல்லை அதை வாங்க நிறைய பேர் இருப்பதாக கண்ணம்மா சொல்கிறார்.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமரின் முடிவு என்ன!

மறுபக்கம் கோர்ட்டில் ஷர்மிளா வக்கீலுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வெண்பாவை போலீஸ் அழைத்து வருகின்றனர். ஷர்மிளா வெண்பாவிடம் வந்து நான் சொல்லும் கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டால் வக்கீல் இந்த கேஸிற்கும் உனக்கும் சம்மந்தம் இல்லை என வாதாடி உன்னை வெளியே எடுப்பார் அதன் பின் நீ டாக்டர் தொழிலை நன்றாக செய்யலாம் ஆனால் நான் சொல்லும் ஒருவரை நீ திருமணம் செய்து குழந்தை என சந்தோசமாக இருக்க வேண்டும் சாய்ஸ் உன்னுடையது என சொல்ல என்ன அம்மா இப்படி மிரட்டுகிறாய் என வெண்பா கேட்கிறார். நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய வேண்டும் இனிமேல் அந்த பாரதி பின்னால் சுற்ற கூடாது நீயே முடிவு செய் என ஷர்மிளா சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!