பாரதியின் விவாகரத்து பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் ஹேமா – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
பாரதியின் விவாகரத்து பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் ஹேமா - சீரியலில் அடுத்த திருப்பம்!
பாரதியின் விவாகரத்து பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் ஹேமா - சீரியலில் அடுத்த திருப்பம்!
பாரதியின் விவாகரத்து பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் ஹேமா – சீரியலில் அடுத்த திருப்பம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியின் விவாகரத்து பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் ஹேமா தனது அம்மாவை பற்றி விசாரிப்பது போல அடுத்தகட்ட கதைக்களத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா:

சமீப காலமாக சற்று மந்தமான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாரதி கண்ணம்மா’ இப்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கடந்த சில எபிசோடுகளாக மருத்துவமனை சம்பந்தப்பட்ட காட்சிகள், வெண்பாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் என சில கதைக்களங்கள் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் மீண்டுமாக பாரதி மற்றும் கண்ணம்மாவின் விவாகரத்து சம்பந்தப்பட்ட எபிசோடுகள் சீரியலில் இடம்பிடிக்க இருகிறது.

கோபியிடம் சண்டை போட வேண்டாம் என கெஞ்சும் மயூ, எழில் படத்தை நினைத்து சந்தோசப்படும் குடும்பம் – இன்றைய எபிசோட்!

அந்த வகையில் சமீபத்தில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு விவாகரத்து தொடர்பாக கோர்ட்டில் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹேமா, பாரதியின் விவாகரத்து பற்றிய விஷயத்தை அறிந்து கொள்வது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, பாரதியை பார்க்க மருத்துவமனைக்கு வரும் ஹேமா உங்களிடம் ஒரு உண்மையை கேட்க வேண்டும் என கூற பாரதி என்ன என்று கேட்கிறார். அப்போது, நீங்கள் யாரை விவாகரத்து செய்யப் போகிறீர்கள். விவாகரத்து மனைவிக்கு தானே தருவார்கள்.

Exams Daily Mobile App Download

உங்களுக்கு மனைவி என்றால் அவர்கள் எனக்கு அம்மா தானே. அப்போ, என் அம்மா உயிருடன் தான் இருக்கிறார்களா. அப்படி இருந்தால் அவர்களை ஏன் விவாகரத்து செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இதை கேட்டதும் பாரதி பதில் சொல்ல முடியாமல் முழிப்பது போல அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இப்போது, கண்ணம்மா பற்றிய உண்மையை ஹேமா அறிந்து கொள்வாரா, பாரதி ஹேமாவுக்கு சொல்லப்போகும் பதில் என்ன என்று விறுவிறுப்பாக நகர இருக்கிறது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here