கோபியிடம் சண்டை போட வேண்டாம் என கெஞ்சும் மயூ, எழில் படத்தை நினைத்து சந்தோசப்படும் குடும்பம் – இன்றைய எபிசோட்!

0
கோபியிடம் சண்டை போட வேண்டாம் என கெஞ்சும் மயூ, எழில் படத்தை நினைத்து சந்தோசப்படும் குடும்பம் - இன்றைய எபிசோட்!
கோபியிடம் சண்டை போட வேண்டாம் என கெஞ்சும் மயூ, எழில் படத்தை நினைத்து சந்தோசப்படும் குடும்பம் - இன்றைய எபிசோட்!
கோபியிடம் சண்டை போட வேண்டாம் என கெஞ்சும் மயூ, எழில் படத்தை நினைத்து சந்தோசப்படும் குடும்பம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா வீட்டிற்கு வர அப்போது ராதிகா வெளியே போங்க கோபி என சொல்கிறார். அப்போது கோபி முடியாது என பிடிவாதமாக இருக்க மயூரா என் அப்பா போல நீங்களும் சண்டை போடாதீங்க என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவிடம் பேச முடியாமல் வீட்டிற்கு வருகிறார். அப்போது ராதிகா நான் டீச்சருக்கு ஒரு நாளும் துரோகம் செய்ய மாட்டேன் என சொல்ல அப்போது கோபி நான் பாக்கியா தான் என் மனைவி என்ற உண்மையை மட்டும் தான் மறைத்தேன் மற்ற எல்லாம் உண்மை தான் நான் என் வயதான பெற்றோர்களுக்கும், என் குழந்தைகளுக்கும் தான் இத்தனை வருஷம் இருந்தேன். எனக்கு நீயும் மயூராவும் தான் முக்கியம் என கோபி சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் ராதிகா நீங்க வெளியே போங்க கோபி என சொல்ல அப்போது கோபி நான் போகமாட்டேன் ராதிகா எனக்கு நீங்க தான் உயிர் என சொல்கிறார். அப்போது ராதிகா வெளியே போங்க என சத்தமாக சொல்ல, இருவரும் சண்டை போடுவதை பார்த்துவிட்டு மயூரா வருத்தப்படுகிறார். பின் கோபியிடம் என் அப்பா போல நீங்களும் சண்டை போடாதீங்க என சொல்கிறார். உடனே கோபி நான் சண்டை போடமாட்டேன் மயூ நீ தான் என்னுடைய உயிர் என சொல்கிறார்.

கோபி பேசமுடியாமல் அங்கிருந்து கிளம்புகிறார். வீட்டில் எழில் படம் தியேட்டரில் வந்திருக்க குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு படத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் படத்தில் வயதானவர்கள் வீட்டில் இருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் என சொன்னது நல்ல கருத்து என சொல்கிறார். பின் தாத்தாவும் படம் நன்றாக இருப்பதாக சொல்கிறார். இனியாவும் நன்றாக இருப்பதாகவும் படம் வெற்றி பெறும் என சொல்கிறார். அப்போது கோபி அமைதியாக இருக்க ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறாய் என கேட்கிறார்.

அப்போது கோபி படம் நன்றாக வரும் வாழ்த்துக்கள் என சொல்லிவிட்டு சாப்பிடாமல் செல்கிறார். பின் எழில் பாக்கியாவிடம் என் படம் பற்றிய கட்அவுட் எல்லாம் சினிமா தியேட்டரில் வைத்திருக்காங்க அதை வந்து பார்க்க வா என கேட்கிறார். பின் பாக்கியாவை அழைத்து கொண்டு எழில் எல்லா அங்கே எழில் பெயர் இருப்பதை பார்த்து பாக்கியா சந்தோசப்படுகிறார். அதன் அருகே நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார். பின் பாக்கியா எனக்கு அப்பா உடன் சினிமா வர வேண்டும், நான் சமைக்கும் போது கூட வர வேண்டும் என பல ஆசைகள் இருப்பதாக சொல்கிறார்

வாக்குவாதத்தில் முடிந்த சண்டை, மீனா அப்பா அம்மாவை அவமானப்படுத்திய ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அவர் அதுக்கு தகுதி இல்லை என எழில் சொல்ல, பின் பாக்கியா வீட்டிற்கு வருகிறார். பாக்கியா ரூமிற்கு செல்ல அப்போது கோபி ராதிகாவிற்கு போன் செய்து பார்க்கிறார். ஆனால் ராதிகா போனை எடுக்கவில்லை. அப்போது பாக்கியா வர உன்னுடன் பேசாமல் இருக்க முடியவில்லை என்னிடம் பேசு என கோபி மெசேஜ் அனுப்புகிறார். அதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பின் பாக்கியா கோபி படுத்ததும் போனை எடுத்து பார்க்கிறார். அப்போது கோபி எழுந்துவிட போனை பாக்கியா பார்ப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!