சாப்பிடாமல் மயக்கம் போட்ட ஹேமா,கண்ணம்மாவை காரணம் சொல்லும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
சாப்பிடாமல் மயக்கம் போட்ட ஹேமா,கண்ணம்மாவை காரணம் சொல்லும் பாரதி - இன்றைய
சாப்பிடாமல் மயக்கம் போட்ட ஹேமா,கண்ணம்மாவை காரணம் சொல்லும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
சாப்பிடாமல் மயக்கம் போட்ட ஹேமா,கண்ணம்மாவை காரணம் சொல்லும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமா மயக்கம் போட்டு விழ அவள் சரியாக சாப்பிடவில்லை என பாரதி சொல்கிறார். மறுபக்கம் சாந்தியை ஏமாற்ற ரோஹித் திட்டமிடுகிறார். பின் ஹேமாவின் நிலைமைக்கு கண்ணம்மா தான் காரணம் என பாரதி சத்தம் போடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா மயக்கம் போட்டு விழுந்துவிட பாரதி அவளுக்கு டிரீட்மென்ட் பார்க்கிறார். அப்போது ஹேமா கண் விழிக்க பாரதி ஹேமாவிடம் எப்போது சரியாக சாப்பிட்டாய் என பாரதி கேட்கிறார். அப்போது ஹேமா மதியத்தில் இருந்து நான் சாப்பிடவில்லை என சொல்கிறார். பாரதி சௌந்தர்யாவிடம் அவளை சாப்பிட வைக்காமல் என்ன செய்தீர்கள் என கேட்க சௌந்தர்யா நாம எல்லாரும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டோம் அதனால் டிரைவரிடம் சாப்பாடு கொடுத்துவிட்டேன் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் சாயங்காலம் வந்து எதாவது சாப்பிட்டாளா என கேட்க சாப்பிட்டு இருப்பாள் என நினைத்தேன் என சௌந்தர்யா சொல்கிறார். பின் அஞ்சலியிடம் ஏன் சாப்பிட கொடுக்கவில்லை என கேட்க அவள் எதுவும் கேட்கவில்லை என சொல்கிறார். ஹேமா சாப்பிடாமல் இருந்ததால் தான் கீழே விழுந்தால் என பாரதி சொல்கிறார். பின் பாரதி ஹேமாவிடம் சரியாக சாப்பிட வேண்டும் என நான் சொல்லி இருக்கேன் ஏன் சாப்பிடவில்லை என பாரதி கேட்கிறார்.

அப்போது ஹேமா எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என சொல்ல இப்போவாவது சொல்லுங்கள் என் அம்மா எங்கே அவரை நான்பார்க்க வேண்டும் என கேட்கிறார். உன் அம்மா நீ பிறக்கும் போதே இறந்துவிட்டாள் என சொல்ல அப்போது ஹேமா அப்போ யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க என கேட்கிறார். நான் யாருக்கும் விவாகரத்து கொடுக்கவில்லை என சொல்ல உண்மையாகவா என ஹேமா கேட்கிறார். ஆமாம் என பாரதி சொல்ல சத்தியம் செய்யுங்கள் என ஹேமா கேட்கிறார், பாரதி சத்தியம் செய்ய ஹேமா அப்படிருக்கே தூங்கிவிடுகிறார்.

மறுபக்கம் ரோஹித் தனது நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் மெக்கானிக் செட்டில் இருந்து வண்டியை எடுத்துக் கொண்டு சென்றாய் எப்போது வருவாய் என கேட்கிறார். எனக்கு இப்போது கண்டிப்பாக வண்டி வேண்டும் என ரோஹித் சொல்ல இங்கே வண்டி ஓனர் வந்து காரை கேட்பதாக சொல்கிறார். பின் உன் அம்மா அழுது கொண்டே இருக்கிறார். கடன் கொடுத்தவன் வந்து பணம் கேட்கிறான் என சொல்ல நீ எப்போது வருவாய் என கேட்கிறார். பின் ரோஹித் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாம் என நினைத்தேன் ஆனால் அந்த அம்மா என் மகளின் மனதில் இடம் பிடித்துவிடு மாப்பிள்ளை என சொல்லிவிட்டு us போய்ட்டாங்க என சொல்கிறார்.

MASKED ஆதார் கார்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அப்போது சாந்தி ரூமை சுத்தம் செய்ய வருகிறார். சாந்தியை ஏமாற்ற வேண்டும் என நினைத்து ரோஹித் பெரிய பணக்காரன் போல பேசுகிறார். பணத்தை அங்கே வைத்து விடு நீ எடுத்துக் கொள் என பேசுகிறார். அதை பார்த்து சாந்தி அம்மா பெரிய பணக்காரனை தான் மாப்பிள்ளையாக பிடித்து இருக்கிறார் என சொல்கிறார். பின் ஹேமாவின் நிலைமையை நினைத்து கண்ணம்மா வருத்தப்பட்டு அழுகிறார். அப்போது சௌந்தர்யா ஆறுதல் சொல்ல பெற்ற மகளை அருகில் இருந்து பார்க்க முடியவில்லை என நினைத்து அழுகிறார்.

அப்போது பாரதி வர ஹேமாவின் நிலைமைக்கு கண்ணம்மா தான் காரணம் என சொல்கிறார். ஏற்கனவே ஒருமுறை அமெரிக்கா கிளம்பும் போது இப்படி தான் நாடகம் ஆடி எல்லாத்தையும் செய்தாய் இப்போது விவாகரத்து பற்றி அவளிடம் சொல்லி விவகாரத்தை நிறுத்த நாடகம் ஆடுகிறாய் வரும் போது அழுது கொண்டிருந்தாய் என்னுடைய மகள் மீது அக்கறை பட நீ யாரு என கேட்கிறார். கண்ணம்மா பாரதி பேசுவதை நினைத்து வருத்தப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here