சமையல் அம்மா தான் தன்னுடைய அம்மாவா என குழப்பத்தில் இருக்கும் ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
சமையல் அம்மா தான் தன்னுடைய அம்மாவா என குழப்பத்தில் இருக்கும் ஹேமா - இன்றைய
சமையல் அம்மா தான் தன்னுடைய அம்மாவா என குழப்பத்தில் இருக்கும் ஹேமா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
சமையல் அம்மா தான் தன்னுடைய அம்மாவா என குழப்பத்தில் இருக்கும் ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் சமையல் அம்மா பெயர் கண்ணம்மா என தெரிந்த பின் ஹேமாவிற்கு கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்ற சந்தேகம் வருகிறது. மறுபக்கம் ஜானகி அம்மா பாரதி மற்றும் கண்ணம்மாவின் குடும்பத்தை பார்க்க ஆசைப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமாவிற்கு சமையல் அம்மா பெயர் கண்ணம்மா என தெரிந்த பின் ஒரே குழப்பமாக இருக்கிறார். பின் லக்ஷ்மிக்கு போன் செய்து முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்கிறார். என்ன ஹேமா என லட்சுமி கேட்க, உங்க அம்மா பெயர் கண்ணம்மாவா என ஹேமா கேட்க அப்போது லட்சுமி ஆமாம் என் அம்மா பெயர் கண்ணம்மா தான் என சொல்கிறார். ஏன் என்னிடம் சொல்லவில்லை என ஹேமா கேட்க லட்சுமி என் அம்மா பெயர் அது தான் என நான் எப்படி சொல்ல முடியும் என கேட்கிறார். இதனை நாள் யாரும் என்னிடம் சொல்லவில்லை என சொல்ல, எனக்கு இன்னைக்கு தான் தெரிந்தது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

சரி உனக்கு இப்போது யார் சொன்னா என கேட்க இன்னைக்கு சமையல் அம்மா மீது லாரி மொத வந்தது அதை நான் பார்த்துவிட்டு சொல்ல பாட்டி சமையல் அம்மா என கத்தினார் என சொல்கிறார். லட்சுமி அதை கேட்டு பதட்டம் அடைய கண்ணம்மா என ஏன் என்னிடம் சொல்லவில்லை என ஹேமா கேட்கிறார். அம்மா மீது லாரி மொத வந்தது தான் முக்கியம் பெயரா முக்கியம் என லட்சுமி கேட்க, எனக்கு பெயர் தான்முக்கியம் என ஹேமா சொல்கிறார். பின் லட்சுமி அதை விடு என சொல்லிவிட்டு போனை வைக்கிறார். பின் ஹேமா எல்லாரும் என்னிடம் உண்மையை மறைத்துவிட்டார்கள் என நினைக்கிறார்.

மறுபக்கம் ஜானகி அம்மா பாரதியை பார்க்க வருகிறார். அப்போது பாரதி உடம்பு எப்படி இருக்கிறது என கேட்க நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். பின் கண்ணம்மாவும் அங்கே வர ஜானகி அம்மா கண்ணம்மாவை கூப்பிடுகிறார். ஜானகி அம்மா என் பசங்க எல்லாரும் வருகிறார்கள் அவர்களுடன் நீங்க இருவரும் உங்களது குடும்பத்தை கூட்டிக் கொண்டு வர வேண்டும் என சொல்கிறார். பாரதி சரி அம்மா அப்பாவை வர சொல்கிறேன் என சொல்ல நான் உங்களுடைய மனைவியை வர சொல்கிறேன் என சொல்கிறார்.

அப்போது பாரதி நான் என் மனைவியை கூட்டிக் கொண்டு வர முடியாது நான் தனியாக தான் இருக்கிறேன் என சொல்கிறார். நானும் என் மனைவியும் பிரிந்து 10 வருஷம் பிரிந்து இருக்கிறோம் என சொல்ல ஜானகி அம்மாவும் ராமன் சாரும் அதிர்ச்சி அடைகின்றனர். உன் மகளுக்கு 10 வயசு தான் ஆகிறது எத்தனை நாட்கள் தான் வாழ்ந்தீர்கள் என கேட்க 1 வருஷம் தான் வாழ்ந்தோம் என சொல்கிறார். பின் ஜானகி அம்மா ரொம்ப வருத்தமாக இருப்பதாக சொல்கிறார். பின் கண்ணம்மா நீ உன் கணவரை அழைத்து கொண்டு வா என சொல்ல கண்ணம்மா நானும் பிரிந்து வாழ்வதாக சொல்கிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜூலையில் அறிவிப்பு!

நானும் என் மகளும் தனியாக தான் இருக்கோம் என சொல்ல ஜானகி அம்மா உங்க மனசு வருத்தப்பட்டால் என்னை மன்னித்துவிடுங்கள் என சொல்கிறார். பின் ஜானகி அம்மா இவங்க வாழ்க்கையில் என்ன நடந்தது என தெரியாமல் நாம எதுவும் செய்ய முடியாது என சொல்கிறார். பின் பாரதி கண்ணம்மாவை அழைத்து நாம குடும்ப வாழ்க்கை பற்றி ஜானகி அம்மாவிடம் சொல்லாதே என சொல்கிறார். பின் பாரதி என் புருஷன் பாரதி தான் என சொல்லாதே என சொல்கிறார்.

அதை கேட்டு கண்ணம்மா நான் இது வரை இங்கே நீங்க தான் என்னுடைய கணவர் என சொல்லி இருக்கேனா என கேட்கிறார். நானும் என் பொண்ணும் கஷ்டப்படுவது உங்களுக்கு எப்போது தெரியும் என கேட்கிறார். நான் இதுவரை நீங்க தான் கணவர் என்பதை சொன்னதே இல்லை அதே போல நீங்களும் உங்க மனைவி என்பதை சொல்லாமல் இருந்தால் சரி தான் என சொல்கிறார். பின் பாரதி வீட்டிற்கு வர ஹேமா சமையல் அம்மா பெயர் கண்ணம்மா தான என கேட்க பாரதி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பாஸ்போர்ட் அலுவலகத்தில் என் அம்மா பெயர் கண்ணம்மா என தான எழுதுனீங்க அப்போ என் அம்மா கண்ணம்மா தான என ஹேமா கேட்கிறார்.

அப்போ சமையல் அம்மா தான் என்னுடைய அம்மாவா என கேட்க நீ அம்மாவை நினைத்து குழப்பத்தில் இருக்கிறாய் அது போல தான் இதையும் நினைத்து குழப்பத்தில் இருக்கிறாய் என சொல்ல, அப்போ எப்படி இருவருக்கும் ஒரே பெயர் இருக்கிறது என கேட்க, கண்ணம்மா என நிறைய பேருக்கு பெயர் இருக்கும் அதனால் அந்த சமையல் அம்மா உன் அம்மா ஆகிட முடியாது என சொல்கிறார். ஒரே பெயரில் நிறைய பேர் இருப்பார்கள் என பாரதி ஹேமாவிற்கு விளக்கம் கொடுக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!