கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கும் பாரதி – புதிய கதைக்களத்துடன் விரைவில் சீசன் 2? வெளியான ப்ரோமோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது முடிவு கட்டத்தை எட்டி இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாரதி, கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்பது போல சீசன் 2க்கான ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை மறைக்கப்பட்டு வந்த உண்மைகள் அத்தனையும் கடந்த நாட்களில் வெளியான எபிசோடுகளில் ஒவ்வொன்றாக வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இதுவரை கண்ணம்மாவின் 2 குழந்தைகள் குறித்த உண்மைகள், பாரதி மற்றும் கண்ணம்மாவின் தனிப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தது.
இதை வைத்து பார்க்கும் போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவு கட்டத்தை நெருங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளிவராத நிலையில், ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 தொடர்பான சில எடிட் செய்யப்பட்ட ப்ரோமோக்கள் வெளியாகி, ரசிகர்களை சற்று குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் தற்பொழுது, ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 சீரியலில் கண்ணம்மாவின் மகளாக நடிகை அனிகா நடித்து வருவதாகவும் இந்த சீசன் பாரதி மற்றும் கண்ணம்மாவின் 2 குழந்தைகளை மையமாக வைத்து உருவாவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இப்போது வெளியாகி இருக்கும் புதிய ப்ரோமோவில் பாரதி தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்பது போலவும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.
பாரதி கண்ணம்மாவை சீக்கிரம் முடிங்கப்பா, ஆர்வம் குறைந்து சலிப்பு அதிகமாகிவிட்டது.
சலிப்பு தட்டவில்லை. விறுவிறுப்பு குறைந்து விடுமோ என்று தான் பயமாக உள்ளது.