தமிழகத்தில் அக்.11 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் அக்.11 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அக்.11 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அக்.11 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

தென்‌ மேற்கு பருவ காற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

07.10.2021: வட கடலோர மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கன்னியாகுமாரி, புதுக்கோட்டை மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, நீலகிரி, கோயம்பத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ உள்மாவட்டங்கள் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

08.10.2021: வட மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கன்னியாகுமாரி, புதுக்கோட்டை மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் நாளை (அக்.8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

09.10.2021: வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

10.10.2021, 11.10.2021: உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் நடத்தும் ஆலோசனை!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யகூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌ கடல்‌ பகுதிகள்:

09.10.2021 முதல்‌ 11.10.2021 வரை: அந்தமான்‌ கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்‌ கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல் பகுதிகள்:

07.10.2021, 08.10.2021 வரை: மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ கர்நாடக கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!